வீரபாண்டி (தேனி)

வீரபாண்டி (தேனி) (ஆங்கிலம்:Veerapandi (Theni)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், தேனி வட்டத்தில், மாரியம்மன் கோவில்பட்டி, முத்துத்தேவன்பட்டி, வயல்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய முதல் நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 4 கிமீ தொலைவில் தேனி - கம்பம் செல்லும் சாலையில் உள்ளது.

Mullai-Periyar River in Veerapandi, Theni

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,358 வீடுகளும், 16,158 மக்கள்தொகையும் கொண்டது. [1]

இது 18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 89 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

கோயில்கள்தொகு

பள்ளிகள்தொகு

  1. அரசினர் மேல்நிலைப்பள்ளி
  2. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  3. பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி
  5. அறிவகம் மெட்ரிகுலேசன் பள்ளி
  6. லிட்டில் கிங்டம் ஆங்கிலப் பள்ளி

 

ஆதாரங்கள்தொகு

  1. Veerapandi Population Census 2011
  2. வீரபாண்டி பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டி_(தேனி)&oldid=2673433" இருந்து மீள்விக்கப்பட்டது