வீர்-சாரா திரைப்படம் 2004 இல் வெளிவந்த ஹிந்தித் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தின் கதாநாயகனாக ஷாருக்கானும் நாயகியாக ராணி முகர்ஜியும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வீர்-சாரா
வீர்-சாரா
இயக்கம்யாஷ் சோப்ரா
தயாரிப்புயாஷ் சோப்ரா
கதைஆதித்ய சோப்ரா
இசைசஞ்சீவ் கோக்லி
நடிப்புஷா ருக் கான்
ராணி முகர்ஜி
பிரீத்தி சிந்தா
விநியோகம்யாஸ்ச் ராஜ் Films
வெளியீடுநவம்பர் 12, 2004
ஓட்டம்192 நிமிடங்கள்.
மொழிஉருது/

ஹிந்தி/

இந்துஸ்தானி
ஆக்கச்செலவு$7,000,000 மில்லியன் டாலர்கள்.

நாடகப்படம் / காதல்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பாக்கிஸ்தானியப் பெண்ணான சாரா ஹாயத் கான் (பிரீத்தி சிந்தா) இந்தியாவிற்குச் சுற்றுலா செல்கின்றார். போகும் வழியிலே விபத்தொன்றில் மாட்டிக் கொள்ளும் அவரை விமான ஓட்டியான வீர் பிரதாப் சிங்கால் (ஷா ருக் கான்)காப்பாற்றப்படுகின்றார். பின்னர் வீர் தனது சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு சாராவை அழைத்துச்செல்கின்றார்.அங்கு வீரின் பெற்றோர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் சாரவை காதலிக்கின்றார் வீர்.சாரா தனது சொந்த நாட்டிற்குத் திரும்பும் தருணம் அவருக்கு கல்யாணம் நிச்சயமாகியிருப்பதாக அறிந்து கொள்கின்றார் வீர்.இதனையடுத்து அவர் தனது காதலை தியாகம் செய்து கொள்கின்றார்.சிறிது காலங்களில் வீரின் மீது தான் காதல் கொண்டிருப்பதாக உணர்ந்து கொள்ளும் சாரா வீரை சந்திப்பதற்காக அவரின் சொந்த ஊருக்குச் செல்லும் அதே சமயம் வீரும் சாராவைக் காண்பதற்காக பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கின்றார் இவரின் வருகையினை அறிந்து கொள்ளும் சாராவினை மணக்க இருந்தவர் வீரினை இந்தியாவிலிருந்து வேவு பார்க்க வந்தவரென பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை 22 வருடங்கள் சிறையில் அடைக்கச் செய்கின்றார்.மேலும் 22 வருடங்களின் பின்னர் சாமியா சித்திக் (ராணி முகர்ஜி) என்னும் வழக்கறியனரால் விடுதலை செய்யப்படுகின்றார்.பின்னர் தனது சொந்த ஊரான பஞ்சாப்பில் சாராவைச் சந்திக்கின்றார் வீர் பிரதாப் சிங்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்-சாரா&oldid=4118481" இலிருந்து மீள்விக்கப்பட்டது