வீர சைவ மடம், கும்பகோணம்

வீர சைவ மடம் என்பது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வீர சைவ மடமாகும். தென் ஆர்க்காடு மாவட்டம் மயிலம், கோவை மாவட்டம் பேரூர் போன்ற இடங்களில் வீர சைவ மடங்கள் இருப்பினும், இவற்றில் தொன்மையானது இந்த கும்பகோணம் பெரிய மடமேயாகும். இது வீரசைவப் பெரிய மடம் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

கும்பகோணம் வீரசைவமடம்

நூல்கள்

தொகு

பெரிய மடத்தின் வரலாற்றைக்காட்டும் அரிய நூல் ஆகிய வீரசிங்காதனபுராணம் முதலில் கன்னடத்தில் இயற்றப்பட்டது. நவகன்னியர் கங்கையுடனும் வீரபத்திரருடனும் கும்பகோணம் வந்து மகாமகக்குளத்தில் புனித நீராடிய செய்தி வீரசிங்காதன புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வீரநரசிம்மதேவன் என்னும் விஜயநகர மன்னன் காலத்தில் சோமசேகரதேவர் என்பவரால் இயற்றப்பட்டது. பின்னர் அந்நூல் திருக்குடந்தை மகத்துத் தேசிகர் என்பவர் ஆணைப்படி வேலைய சுவாமிகள் என்வரால் மழைய மல்லேச்சுரச்சருக்கம் முதல் மூன்று சருக்கங்கள் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப் பெற்றன. இவ் வேலைய சுவாமிகள் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர் ஆவார். இந்நூலின் ஏனைய பகுதிகள் சிதம்பரம் மடத்தில் இருந்த வசவலிங்கையர் வேண்டுகோளுக்கிணங்க மெய்கண்டதேவர் சந்தானம் திருத்துறையூர் ஆதீனத் தலைவராய்க் கோட்டூரில் இருந்த உமாபாகதேவர் என்பவரால் இயற்றப்பட்டன. இது 875 செய்யுட்களை உடையது. [1]

வீரசிங்காதனம்

தொகு

சிவபெருமான் வீரபத்திரர்க்குக் காட்சி தந்தருளிய பீடமே வீரசிங்காதனம் ஆகும். அருகில் வீரபத்திரர் கோயிலும் ஏற்பட்டது. இக்கோயிலில் வீரபத்திரர்க்குக் கங்கைவீரன் என்று பெயர்.

சங்கரமடத்தின் மூலம் இசைப்பணி, தமிழ்ப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, இந்துசமய மன்றம் மூலம் பழைய இலக்கிய பதிப்புப்பணி, புத்திலக்கியங்கள் இயற்றல், உடைநடைநூல்கள் எழுதும் பணி, திருமுறை வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

பிற மடங்கள்

தொகு

கும்பகோணத்தில் உள்ள பிற மடங்கள் மௌனசுவாமி மடம்,வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகியவையாகும். ஆகியவையாகும். இஷ்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 மலர்க்குழு, மகாமகம் 1992 சிறப்பு மலர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_சைவ_மடம்,_கும்பகோணம்&oldid=2946973" இலிருந்து மீள்விக்கப்பட்டது