பேரூர்
பேரூர் (ஆங்கிலம்:Perur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் ஆறைநாடு என்னும் பகுதியில் இருந்தது. [3]இவ்வூரில் பேரூர் பட்டீசுவரர் கோயில் உள்ளது.
பேரூர் | |
அமைவிடம் | 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 7,937 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 418 மீட்டர்கள் (1,371 அடி) |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 10°58′N 76°54′E / 10.97°N 76.9°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பட்டீசுவரர் ஆலயம்
தொகுபேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது[6]. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன[7].
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17
- ↑ "Perur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ http://www.templenet.com/Tamilnadu/pattperu.html
- ↑ "இந்து நாளிதழில் வெளியான கட்டுரை". Archived from the original on 2008-01-23. பார்க்கப்பட்ட நாள் 2008-12-17.