வீழ்ப்பு வரைபடங்கள்

பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பொருள் அல்லது காட்சி பற்றிய விபரங்களைத் தரும் வகையில் அவற்றின் தோற்றங்களை இரு பரிமாணத் தளங்களில் காட்டும் வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்கள் (Projection Drawings) எனப்படுகின்றன. வீழ்ப்பு வரைபடங்கள் பலவகைப் படுகின்றன. அவற்றுட் சில பொருட்களினதும், காட்சிகளினதும் இயல்புகளை இரு பரிமாணத் தோற்றத்தில் வெளிப்படுத்த, வேறு சில அவற்றின் முப்பரிமாண இயல்புகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

கட்டுமான வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

வரலாறு

தொகு

வீழ்ப்பு வரைபட வகைகள்

தொகு

வீழ்ப்பு வரைபடங்களை அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. இயலுறு தோற்ற வரைபடங்கள்
  2. சமாந்தர வீழ்ப்பு வரைபடங்கள்

இயலுறு தோற்ற வரைபடங்கள் ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும் போது தோற்றமளிப்பதுபோல் வரையப் படுவதாகும். இவ்வகை வரைபடங்கள், தொலைவிலுள்ள பொருட்கள் அல்லது தூர அளவுகள் சிறியனவாகவும், அண்மையிலுள்ளவை பெரிதாகவும் தெரியும் தோற்றப்பாட்டை அண்ணளவாக வெளிப்படுத்த முனைகின்றன. இவ் வரைபடங்களில் காணும் காட்சியிலுள்ள சமாந்தரக் கோடுகள் அனைத்தும் ஒரே புள்ளியிலிருந்து ஆரம்பமாவது போல் தோற்றமளிக்கும். இப்புள்ளி வீழ்ப்பு மையம் எனப்படுகின்றது. இயலுறு தோற்றங்களின் வேறுபாடுகள் இவ் வீழ்ப்பு மையங்களின் எண்ணிக்கைகளினால் தீர்மானிக்கப் படுகின்றன.

சமாந்தர வீழ்ப்பு வரைபடங்கள் ஒரு பொருளின் அல்லது காட்சியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வரையப்படும் கோடுகள் ஒரு கற்பனைத் தளத்தில் வீழ்த்தப்படும்போது உருவாகும் படங்களை ஒத்தவை ஆகும். இவ்வகையில் உள்ள பல வேறுபாடுகள் மேற்குறிப்பிட்ட தளங்களுக்குச் சார்பான வீழ்ப்புகளின் திசையினால் தீர்மானிக்கப் படுகின்றன.

மேற்காட்டிய இரு வகைகளின் கீழ் பல துணை வகைகளும் உள்ளன. அவற்றைக் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது.

தள வடிவவியல் வீழ்ப்புகள் (Planar Geometric Projection)
சமாந்தர வீழ்ப்பு (Parallel Projection) இயலுறு தோற்ற வீழ்ப்பு (Perspective Projection)
குத்து வீழ்ப்பு (Orthographic Projection) சரிவு வீழ்ப்பு (Oblique Projection)
1. ஒரு புள்ளி இயலுறு தோற்ற வீழ்ப்பு (One-Point Perspective)
2. இரு புள்ளி இயலுறு தோற்ற வீழ்ப்பு (Two-Point Perspective)
3. முப் புள்ளி இயலுறு தோற்ற வீழ்ப்பு (Three-Point Perspective)
இரு பரிமாணப் படங்கள் அச்சுவழி அளவை வீழல் (Axonometric Projection)
1. கபினெற்
2. கவாலியர்
1. கிடைப் படம்(Plan)
2. முகப்புப் படம்(Front Elevation)
3. பக்கப் படம் (Side Elevation)
1. சம அளவு வீழ்ப்பு (Isometric Projection)
2. ஈரளவு வீழ்ப்பு (Diametric Projection)
3. மூவளவு வீழ்ப்பு (Triametric Projection)

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீழ்ப்பு_வரைபடங்கள்&oldid=2688511" இலிருந்து மீள்விக்கப்பட்டது