வெசுட்டோ மெல்வின் சுலிப்பர்

அமெரிக்க வானியலாளர்

வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் (Vesto Melvin Slipher) (நவம்பர் 11, 1875 - நவம்பர் 8, 1969) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் முதன்முதலாக பால்வெளிகளின் ஆர விரைவுகளைக் கணக்கிட்டார். இது விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கு ஆய்வுசார் அடிப்படையைத் தந்தது.[1][2][3][4]

வெசுட்டோ மெல்வின் சுலிப்பர்
Vesto Melvin Slipher
V.M. Slipher.gif
பிறப்புநவம்பர் 11, 1875(1875-11-11)
மல்பெரி, இந்தியானா
இறப்புநவம்பர் 8, 1969(1969-11-08) (அகவை 93)
பிளேகுசுடாபு, அரிசோனா
கல்லறைமக்கள் கல்லறை, பிளேகுசுடாபு
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
பணிவானியல்
பணியகம்உலோவல் வான்காணகம்
அறியப்படுவதுவிரிவடையும் அண்டம்
உறவினர்கள்இயர்ல் சி. சுலிப்பர் (தம்பி)

சுலிப்பர் இந்தியானாவைச் சேர்ந்த மல்பெரியில் பிறந்தார். இவர் தன்முனைவர் பட்டத்தை 1909 இல் புளூமிங்டன் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1] இவர் அரிசோனாவில் பிளேகுசுடாபில் அமைந்த உலோவல் வான்காணகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கழித்தார். இங்கு இவர் 1915 இல் உதவி இயக்குநர் ஆனார். 1916 இல் செயல் இயக்குநர் ஆனார். இறுதியாக, 1926 இல் இருந்து 1952 இல் ஓய்வுபெறும் வரை இயக்குநராக இருந்தார்.[1] இவரது உடன்பிறப்பாகிய இயர்ல் சி. சுலிப்பரும் வானியலாளராகி, உலோவல் வான்காணக இயக்குநராகத் இருந்துள்ளார்.

இவர் 1929 இல் உவரிய (சோடிய) அடுக்கைக் கண்டுபிடித்தார்.[5] இவர் கிளைடு தாம்பவுகை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு புளூட்டோவைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.[1]

தவறுதலாக, எட்வின் ஹபுள் பால்வெளிகளின் செம்பெயர்ச்சியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது;[6] இந்த அளவீடுகளும் அதன் சிறப்பும் 1917 க்கு முன்பே பிற வான்காணகங்களில் இருந்த ஜேம்சு எட்வார்டு கீலர் (இலிக், அல்லெகனி), வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் (உலோவல்), வில்லியம் வாலசு கேம்பெல் (இலிக்) ஆகியோரால் அறியப்பட்டிருந்தன.

இவர் அரிசோனாவில் உள்ள பிளேகுசுடாபில் இறந்தார்.[1][7] அங்கே மக்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Nesto (sic) Slipher, 93, Astronomer, Dies". த நியூயார்க் டைம்ஸ் (Flagstaff, AZ): p. 47. November 9, 1969. November 10, 1969 
  2. Way, M.J., தொகுப்பாசிரியர் (2013). Origins of the Expanding Universe: 1912-1932.. San Francisco: ASP Conference Series 471. Astronomical Society of the Pacific.. 
  3. Nussbaumer, Harry (2013). 'Slipher's redshifts as support for de Sitter's model and the discovery of the dynamic universe' In Origins of the Expanding Universe: 1912-1932. Astronomical Society of the Pacific. பக். 25-38. Physics ArXiv preprint
  4. O'Raifeartaigh, Cormac (2013). The Contribution of V.M. Slipher to the discovery of the expanding universe in 'Origins of the Expanding Universe'. Astronomical Society of the Pacific. பக். 49-62. Physics ArXiv preprint
  5. http://www.albany.edu/faculty/rgk/atm101/sodium.htm
  6. ஆனால் இது 1910 களில் வெசுட்டோ சுலிப்பரால் நோக்கப்பட்டது. இது உலகில் யாருக்கும் தெரியாது. Ref: Slipher (1917): Proc. Amer. Phil. Soc., 56, 403.
  7. Giclas, Henry L. (2007). "Slipher, Vesto Melvin". in Hockey, Thomas. Biographical dictionary of astronomers. vol. II, M-Z. Springer. பக். 1066. https://books.google.com/books?id=t-BF1CHkc50C&pg=PA1066. 

வெளி இணைப்புகள்தொகு