வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம்
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இக்கோவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு-பாலமோட்டை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலையின் உச்சியில் அமைந்துள்ளது. கிமு 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த[1] இந்தப் பழமையான இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புகளைக்கொண்டு காணப்படுகின்றது.[2]
300 மீட்டர் உயரமான வெடுக்குநாறிமலை அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது. இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேசுவரர் என்ற சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.[2] கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.[2]
2018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளத் தடை வித்தனர். ஆனாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை அடுத்து, இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி காவல்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோவிலைப் புனரமைக்கவோ அல்லது புதிய கட்டடங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.[2][3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Parker, H. (1909). Ancient Ceylon: An Account of the Aborigines and of Part of the Early Civilisation. London: Luzac & Co. p. 397, 431, 432.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "வெடுக்குநாறிமலையிலிருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயத்தை அமைக்க அனுமதி". Archived from the original on 5 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸவரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா". Archived from the original on 3 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "'வெடுக்குநாறிமலை' பற்றி பேசுவதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை". 26 ஆகத்து 2018 accessdate=8 செப்டம்பர் 2019. Archived from the original on 2019-09-08. பார்க்கப்பட்ட நாள் 2019-09-08.
{{cite web}}
: Check date values in:|date=
(help); Missing pipe in:|date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ "வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்". 11-08-2018. Archived from the original on 2018-10-13. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)CS1 maint: unfit URL (link)