கிமு 2-ஆம் நூற்றாண்டு
கிமு 2-ம் நூற்றாண்டு (2nd century BC) என்பது கிமு 200 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 101 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.
இரண்டாவது பியூனிக் போரில் வெற்றி பெற்ற உரோமைக் குடியரசு தனது எல்லையை மேலும் விரிவாக்கி, கடைசியாக கிரேக்கத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மூன்றாம் பியூனிக் போரை அடுத்து கார்த்தேஜ் நகரை முற்றாக அழித்து வடக்கு ஆப்பிரிக்கக் கரையையும் கைப்பற்றியது. உரோமின் ஆதிக்கம் கிட்டக் கிழக்கு வரை பரவியது. செலுசிட் இராச்சியம் போன்ற எலெனிஸ்டிக் நாடுகள் புதிய ஆட்சியாளர்களுடன் போரினை விரும்பாத நிலையில் உரோமர்களுடன் உடன்பாட்டுக்கு வந்தன. நூற்றாண்டின் இறுதியில், உரோம இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் இராணுவம் கையசு மாரியசு தலைமையிலான தொழில்சார் தன்னார்வமுள்ள இராணுமாக மாற்றப்பட்டது.
கிழக்காசியாவில், சீனா ஆன் அரசமரபின் கீழ் பெரும் வெற்றி பெற்று வந்தது. ஆன் பேரரசு கிழக்கே கொரியா முதல் தெற்கே வியட்நாம், மேற்கே தற்போதைய கசக்ஸ்தான் வரை தனது எல்லையை விரிவாக்கியது. அத்துடன் இந்த நூற்றாண்டில் ஆன் பேரரசு மேற்குலகில் நாடுகளைக் காண்பதற்காக சாங் குயின் என்ற தனது நாடுகாண் பயணியை அனுப்பியது.[1]
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 14, கிமு 190 - உரோமையில் சூரிய கிரகணம்[2] பதியப்பட்டது
- கிமு 175 - சிரியாவின் நான்காம் செலூக்கசு கொல்லப்பட்டதை அடுத்து நான்காம் அண்டியோக்கசு முடிசூடினான்.
- சூன் 21, கிமு 168 - உரோமில் நிலவு மறைப்பு பதியப்பட்டது.
- கிமு 164 - எருசலேம் கோவில் மறுசீரமைக்கப்பட்டது. அனுக்கா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
- கிமு 148 - உரோமைப் பேரரசு மக்கெடோனியாவைக் கைப்பற்றியது.
- கிமு 1129 - செலூசிட் இராச்சியம் கவிழ்ந்தது.
- தேரவாத பௌத்தம் இலங்கையில் மகிந்தவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.