கிமு 3-ஆம் நூற்றாண்டு
கிமு 2-ம் நூற்றாண்டு (2nd century BC) என்பது கிமு 300 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 201 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.
இந்நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகள் கிழக்கே கிரேக்கர்களின் எலினிஸ்த இராச்சியங்கள், மற்றும் மேற்கே கார்த்தேசு (இன்றைய துனீசியாவில்) வணிக இராச்சியம் ஆகியன சமநிலையில் இருந்தன. உரோமைக் குடியரசுக்கும் கார்த்தேசுவுக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சை இச்சமநிலையைக் குலத்தது. அடுத்தடுத்த பத்தாண்டுகளில், உரோமர்களுடனான பியூனிக்குகளின் போரில் வடக்கு ஆப்பிரிக்காவின் கார்த்தாசீனியக் குடியரசு அழிக்கப்பட்டது. இரண்டாம் பியூனிக்குப் போரை அடுத்து நடுநிலக் கடலின் மேற்கே உரோமர்களின் செல்வாக்கு அதிகரித்தது.
இந்தியாவில், அசோகர் மௌரியப் பேரரசை ஆண்டார். சங்ககாலப் பாண்டியர், முற்காலச் சோழர்கள், சேரர் வம்சங்கள் தமிழகத்தை ஆண்டன. மங்கோலியாவில் சியோங் நூ தனது ஆட்சியின் உச்சியில் இருந்தான். சின் ஷி ஹுவாங் சின் அரசமரபை தாபித்து சீனாவின் முதலாவது குறுகியகால பேரரசை நிறுவினான். இதன் பின்னர் ஆன் அரசமரபு தோன்றியது.
நிகழ்வுகள்
தொகு- கிமு 290கள் - பிந்துசாரர் தனது தந்தை சந்திரகுப்த மவுரியருக்கு அடுத்ததாக மௌரியப் பேரரசர் ஆனார்.
- கிமு 288 - அனுராதபுரத்தில் புனித வெள்ளரசு மரக்கிளை நாட்டப்பட்டது.
- கிமு 280 - ரோடொஸின் கொலோசஸ் கட்டி முடிக்கப்பட்டது.
- கிமு 275 - பாபிலோன் வரலாறு முடிவு.
- கிமு 273 – கிமு 232 - பேரரசர் அசோகர் மௌரியப் பேரரசை ஆண்டார்.
- கிமு 218 - ஹன்னிபால் ஆல்ப்ஸ் மலையை தாண்டி இத்தாலியுள் புகுந்தான்.
- கிமு 214 - சின் ஷி ஹுவாங் சீனப் பெருஞ்சுவரைக் கட்ட உத்தரவிட்டார்.
- மகிந்த தேரர் இலங்கை சென்று மன்னன் தேவநம்பிய தீசனை பௌத்தத்திற்கு மதம் மாற்றினார்.
- இந்திய வணிகர்கள் அராபியத் தீபகற்பத்துக்கு அடிக்கடி சென்று வந்தனர்.
- சீனாவின் ஆன் அரசமரபு தொடங்கியது. (கிமு 202 – கிபி 220).
- அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
கண்டுபிடிப்புகள்
தொகு- எராட்டோஸ்தீனசு புவியின் விட்டத்தை துல்லியமாகக் கணக்கிட்டார்.
- சீனாவில் வெய்ச்சி விளையாட்டு ஆரம்பம்.
- எகிப்தில் நெட்டாண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இது கிமு 55 இலேயே அதிகாரபூர்வமாக்கப்பட்டது.
- கிமு 293: முதலாவது ரோமன் சூரிய மணி காட்டி அறிமுகம்.
- சீனாவில் இருந்து பட்டு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது.
முக்கிய நபர்கள்
தொகு- மென்சியசு, சீன மெய்யியலாளர் (கிமு 371 – கிமு 289)
- யூக்ளிடு, (கிமு 365– கிமு 275)
- இளஞ்சேட்சென்னி, சோழ மன்னர் (~கிமு 301)
- பேரரசர் அசோகர், மௌரியப் பேரரசர் (கிமு 273 – கிமு 232)
- ஆர்க்கிமிடீஸ், (~கிமு 287 – கிமு 212)
- எரடோசுதெனீசு, கிரேக்க கணிதவியலாளர் (கிமு 276 – கிமு 194)
- சின் ஷி ஹுவாங், சீனப் பேரரசர் (கிமு 259 – கிமு 210)
- ஹன்னிபால் (கிமு 247 – கிமு 182)