வெண்டாழிசை

வெண்டாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இது ஆசிரியத்தளை, கலித்தளை ஆகியவற்றுள் ஒன்றாலோ, பலவாலோ மூன்றடிகளில் அமையும். இதன் ஈற்றடி சிந்தடியாகவும் (முச்சீர்) ஏனைய அடிகள் அளவடியாகவும் (நாற்சீர்) வரும்.

எடுத்துக்காட்டு

நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்

(ஆசிரியத்தளையில் அமைந்த வெண்டாழிசைப் பாடல்)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்டாழிசை&oldid=959545" இலிருந்து மீள்விக்கப்பட்டது