வெண்ணிற ஆடை
வெண்ணிற ஆடை (Vennira Aadai) 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று தமிழில் வெளிவந்த முக்கோண காதல் திரைப்படமாகும்.[1] ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[2]
வெண்ணிற ஆடை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் சித்ராலயா |
கதை | ஸ்ரீதர் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | ஸ்ரீகாந்த் ஜெயலலிதா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1965 |
நீளம் | 5140 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படமே ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படமாகும். இப்படத்தில் முதலில் தோன்றியதால் நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்றும் மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தி என்றும் அறியப்பட்டனர்.
கதைச்சுருக்கம்
தொகுபள்ளி மாணவி ஒருவருக்கு விடலைப்பருவத்திலேயே திருமணம் நடந்துவிடுகிறது. அவரது கணவன் ஒரு நேர்ச்சியில் இறந்துவிடுகிறான். கணவன் இறந்த அதிர்ச்சியில் அவளது மனநிலை பாதிக்கப்படுகிறது. அவளுக்கு மருத்துவம்பார்க்கும் மருத்துவரை அவள் காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் அந்த மருத்துவர் ஏற்கனவே வேரொரு பெண்ணைக் காதலித்துவருகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை முடிவு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 27 December 2022.
- ↑ "Vennira Aadai". Gaana. Archived from the original on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.