வெண்பா (தழுவல்)

வெண்பாவின் முடிபு காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டு முடிவுகளில் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் நெறிமுறை உள்ளது. இந்த முறைமையில் மாற்றம் பெற்று வந்த வெண்பாக்கள் பண்டைய இலக்கியங்களில் உள்ளன. யாப்பருங்கல விருத்தி நூலில் அவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. [1] இவற்றை நாம் வெண்பா என ஏற்றுத் தழுவிக்கொண்டுள்ளோம்.

காசு, பிறப்பு என்பன சீர் வாய்பாடுகள். இவை முறையே நேர்பு, நிரைபு என்னும் அசை வாய்பாடுகள். இவை குற்றியலுகரத்தில் முடிவதைக் காணலாம். எடுத்துக் காட்டப்பட்டுள்ளது போல் பண்டைய வெண்பாக்களில் சில முற்றுகரத்ததில் [2] முடிகின்றன. இதற்கு இலக்கணம் கூறும் நூற்பா இதனைச் சிறப்பு இல்லாதது எனக் குறிப்பிடுகிறது.[3]

1 தொகு

திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு. [4]

2 தொகு

செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,

வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,
பொய்யாதல் உண்டோ மதுரை புனை தேரான்
வையை உண்டாகும் அளவு [5]

3 தொகு

தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை, கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு

4 தொகு

வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு [6]

5 தொகு

இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்--
காலைப் போய் மாலை வரவு. [7]

6 தொகு

பாலன் தனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின்
மேலன்று நீகிடந்தாய் மெய்யன்பர் - ஆலன்று
வேலைநீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு

7 தொகு

எளிதின் இரண்டடியும் காண்பதற்கென் உள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே - களியிற்
பொருந்தா தவனைப் பொரலுற் றரியாய்
இருந்தான் திருநாமம் எண்ணு

8 தொகு

நுண்மைசால் கேள்வி நுணங்கியோர் சொல்லையாய்
தொன்மைசால் நன்மருந் து

9 தொகு

நெடுநுண் சிலையலைக்கும் நீர்மைத்தே பேதை
கொடிநுண் புருவக் குலா

10 தொகு

நிழலிடையிஃ தோபுகுந்து நிற்கவே என்றேற்(கு)
அழலிடை அம்மலரே போன்றாய் - கழலுடைக்காற்
காம்போசன் ஆமூர்க் கடலார் மடமகளே
வேம்போஎன் வாயின் வினா

மேற்கோள் தொகு

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 181, 182
  2. குற்றியலுகரம் அல்லாமல் குற்றியலுகர அசையில் முடியும் உகரங்கள்
  3. குற்றுகரச் சீரோடு ஊகார ஆகாரச் சீர்
    இற்ற எழுவாயாப் பின்னிசைத்தாய் - முற்றுகரம்
    ஈறாய் வருமே எனினும் நிரையவாய்க்
    கூறார் சிறப்புடைத்தாக் கொண்டு

  4. முத்தொள்ளாயிரம் - பாடல் 27
  5. பரிபாடல் திரட்டு 10
  6. பரிபாடல் 20
  7. பரிபாடல் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பா_(தழுவல்)&oldid=3452545" இலிருந்து மீள்விக்கப்பட்டது