வெபரின் பாய்மரப் பல்லி
வெபரின் பாய்மரப் பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | ஊர்வன
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கைட்ரோசொரசு
|
இனம்: | கை. வெபெரி
|
இருசொற் பெயரீடு | |
கைட்ரோசொரசு வெபெரி பார்போர், 1911[1] |
வெபரின் பாய்மரப் பல்லி (Weber's sailfin lizard) அல்லது கல்மகோரா பாயமரத்துடுப்பு டிராகன் (கைட்ரோசொரசு வெபெரி) என்பது அகமிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
புவியியல் வரம்பு
தொகுகை. வெபெரி கல்மகோரா மற்றும் மலுக்குவின் டெர்னேட் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.[1]
ஆயுள்
தொகுகை. வெபெரியின் ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.[2]
விளக்கம்
தொகுகை. வெபெரி என்பது கைட்ரோசொரசு பேரினத்தின் மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்களில் மிகச் சிறியது. இதன் சராசரி மொத்த நீளம் (வால் உட்பட) 2–3 அடி (0.61–0.91 m) ஆகும்.
உணவு
தொகுகை. வெபெரி அனைத்துண்ணி வகையினைச் சார்ந்தது. எந்த விலங்கைத் தின்றுவிட முடியுமோ அதைத் தின்னும் தன்மையுடையது. பலவகையான தாவரங்களையும் பழங்களையும் உட்கொள்கிறது.
கொல்லைப்படுத்தல்
தொகுகொல்லைப்படுத்தப்பட்ட நிலையில், கை. வெபெரியின் இளம் உயிரிகள் பொதுவாக 60% பூச்சி / 40% தாவர உணவுகளின் உதவியால் பராமரிக்கப்படுகின்றன. முதிர்ச்சியடைந்தவை தோராயமாக 75% தாவரங்களையும் 25% பூச்சிகளையும் மற்ற தாவரமற்ற உயிரினங்களையும் உட்கொள்கின்றன.
இனப்பெருக்கம்
தொகுகை. வெபெரி முட்டையிட்டு குஞ்சுப் பொறிக்கக்கூடியவை.[1]
சொற்பிறப்பியல்
தொகுஇதனுடைய சிற்றினப்பெயரான வெபெரி, ஜெர்மன்-இடச்சு விலங்கியல் நிபுணர் மேக்சு வில்ஹெல்ம் கார்ல் வெபர் வான் போசின் நினைவாக இடப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 {{Denzer W, Campbell PD, Manthey U, Glässer-Trobisch A, Koch A. FIGURE 8 in Dragons in neglect: Taxonomic revision of the Sulawesi sailfin lizards of the genus Hydrosaurus Kaup, 1828 (Squamata, Agamidae). Zootaxa 4747(2) 275-301. January 2020. doi:10.5281/zenodo.3694822
- ↑ "Exoticpetia.com". Archived from the original on 2009-10-01. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Hydrosaurus weberi, p. 280).
வெளி இணைப்புகள்
தொகுமேலும் படிக்க
தொகு- Barbour T (1911). "New Lizards and a New Toad from the Dutch East Indies, with Notes on Other Species". Proceedings of the Biological Society of Washington 24: 15–22. (Hydrosaurus weberi, new species, pp. 20–21).
- Barts M, Wilms T (2003). "Die Agamen der Welt". Draco 4 (14): 4-23. (in German).
- Colwell GJ (1993). "Hydrosaurus weberi (Weber's sail-fin dragon)". Morphology Herpetological Review 24 (4): 150.
- de Rooij N (1915). The Reptiles of the Indo-Australian Archipelago. I. Lacertilia, Chelonia, Emydosauria. Leiden: E. J. Brill. xiv + 384 pp.
- Gábris J (2003). "Zur Haltung von philippinischen Segelechsen (Hydrosaurus pustulatus)". Draco 4 (14): 24–33. (in German).
- Werning H (2002). Wasseragamen und Segelechsen. Münster: Natur und Tier Verlag. 127 pp. (in German). [review in Sauria 26 (4): 17.]
- Werning H (2004). "Bibliographie der Gattungen Physignathus, Lophognathus und Hydrosaurus". Iguana Rundschreiben 17 (2): 18–31. (in German).