வெப்ப நியூத்திரன் அணு உலை

வெப்ப நியூத்திரன் அணு உலை (thermal neutron reactor) என்பது மெதுவான அல்லது வெப்ப நியூத்திரன்களை பயன்படுத்தும் ஓர் அணுக்கரு உலை ஆகும். பெரும்பாலான மின் அணுஉலைகள் இவ்வகையானவையே. இவற்றில் நியூத்திரன் மட்டுப்படுத்தி மூலம் நியூத்திரன்களின் வேகத்தை, தங்களைச் சூழ்ந்துள்ள துகள்களின் சராசரி ஆற்றலுக்கு இணையாகும்வரை குறைக்கப்படுகிறது; அதாவது, நியூத்திரன்களின் வேகம் குறைந்த வேகத்திலுள்ள வெப்ப நியூத்திரன்களின் வேகத்திற்கு குறைக்கப்படுகிறது. . யுரேனியம்-235 இன் அணுக்கருனி குறுக்குப்பாகம் மெதுவான வெப்ப நியூத்திரன்களுக்கு ஏறத்தாழ 1000 பார்ன்கள். இதுவே விரைவு நியூத்திரன்களுக்கு 1 பார்னுக்கு அண்மித்துள்ளது.[1]

யுரேனியம்-235களை வெப்ப நியூத்திரன்கள் தாக்கும்போது பிளவுபட யுரேனியம்-238 ஐ விடக் கூடுதல் வாய்ப்புள்ளது. எனவே U-235 பிளவிலிருந்து ஒரு நியூத்திரனாவது மற்றொரு அணுக்கருனியை தாக்கி அதுவும் பிளவுபட ஏதுவானால் தொடர்வினை நீடிக்கும். இவ்வாறு தொடர்வினை தன்னாலேயே நீடிக்குமானால் அது உய்நிலை எதிர்வினை எனப்படும். இந்த நிலையை எட்டக்கூடிய U-235யின் திண்மை உய்நிலை பொருண்மை எனப்படுகிறது.

வெப்ப அணு உலைகளில் கீழ்கண்டவை அமைந்துள்ளன:

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Some Physics of Uranium". பார்த்த நாள் 2009-01-18.