வெய்சைட்டு
வெய்சைட்டு (Weissite) என்பது Cu2−xTe என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். தாமிர தெலூரைடு சேர்மமான இது ஒரு தெலூரைடு வகை கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. அறுகோணப் படிக வடிவத்தில் வெய்சைட்டு கனிமம் காணப்படுகிறது. வெய்சைட்டு கனிமத்தின் ஒப்படர்த்தி 6 என்றும் மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இதன் கடினத்தன்மை 3 என்றும் அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொலராடோ, அரிசோனா மற்றும் நியூ மெக்சிகோவில் உள்ள குன்னிசன் மாகாணம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேற்கு ஆத்திரேலியாவின் கல்கூர்லி நகரத்திலும் சுவீடன் நாட்டின் டலர்னா மற்றும் வார்ம்லாண்டு பகுதிகளிலும் இக்கனிமம் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.[2]
வெய்சைட்டு Weissite | |
---|---|
வெய்சைட்டும் இடைட்டும் | |
பொதுவானாவை | |
வகை | தெலூரைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu 2−xTe |
இனங்காணல் | |
நிறம் | நீலக்கருப்பு முதல் கருப்பு வரை |
படிக இயல்பு | வில்லை வடிவ திரட்சிகள் |
படிக அமைப்பு | அறுகோணப் படிகம் |
பிளப்பு | இல்லை |
முறிவு | சமமற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 6 |
இரட்டை ஒளிவிலகல் | தனித்துவம் |
பலதிசை வண்ணப்படிகமை | தனித்துவம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் வெய்சைட்டு கனிமத்தை Wst[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பைரைட்டு, தெலூரியம், சில்வானைட்டு, பெட்சைட்டு, இரிக்கார்டைட்டு, கந்தகம், தங்கம், கலவெரைட்டு மற்றும் கிரென்னரைட்டு ஆகியவற்றுடன் தொடர்புடைய நீர்வெப்ப படிவுகளில் வெய்சைட்டு கனிமம் சேர்ந்து தோன்றுகிறது.[1]
முதன்முதலில் 1927 ஆம் ஆண்டில் கொலராடோவின் குன்னிசன் மாகாணம் வல்கன் மாவட்டத்தில் உள்ள குட்டோப் சுரங்கத்தில் வெய்சைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2] சுரங்கத்தின் உரிமையாளர் லூயிசு வெயிசு நினைவாகக் கனிமத்திற்கு வெய்சைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Weissite in the Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 2.2 Mindat entry
- ↑ 3.0 3.1 Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.