வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை

வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை (foreign exchange market; சுருக்கமாக போரெக்ஸ் அல்லது பொரெக்ஸ் (forex) அல்லது எப்எக்ஸ் (FX); நாணயச் சந்தை currency market) எனப்படுவது நாணயங்களின் வணிகத்திற்கான ஒர் உலகலாவிய பரவலாக்கச் சந்தை ஆகும். இது நடைமுறை அல்லது வரையறுக்கப்பட்ட விலையில் வாங்குதல், விற்றல், நாணயப் பரிமாற்றம் ஆகிய அணைத்துப் பண்புகளையும் உள்ளடக்குகின்றது. வணிகத்தின் அளவு அடிப்படையில் இது உலகில் பாரிய சந்தையாக விளங்குகின்றது.[1] இச்சந்தையின் பிரதான பங்களிப்பாளர்களாக பாரிய பன்னாட்டு வங்கிகள் காணப்படுகின்றன. உலகெங்குமுள்ள வர்த்தக நிறுவனங்கள் வார இறுதி தவிர்த்த நாட்கள் முழுவதும் பலதரப்பட்ட வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் ஆதாரமாகச் செயற்படுகின்றன. வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை வேறுபட்ட நாணயப் பெறுமதியை தொடர்பில் முடிவு செய்வதில்லை. ஆனால், ஒரு நாணயத்திற்கு எதிரான கேள்வியை மற்றொரு நாணயப் பெறுமதியின் நடைமுறைச் சந்தை விலையை அமைக்கிறது.

வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை வர்த்தக நிறுவனங்கள் ஊடாகச் செயற்படுவதோடு, பல மட்டங்களில் இயங்குகிறது. வங்கிகள் "முகவர்கள்" எனப்படும் சிறு அளவிலான பொருளாதார வணிக நிறுவனங்களைத் திருப்பிவிடுகின்றன. இந்தப் பொருளாதார வணிக நிறுவனங்கள் பாரிய அளவு வெளிநாட்டுப் பரிமாற்ற வணிகத்தின் தொடர்புபட்டவையாக இருக்கின்றன. வெளிநாட்டுப் பரிமாற்ற முகவர்களாக பல வங்கிகள் இருப்பதால், இதனை "உள்ளக வங்கிச் சந்தை" என்று அழைக்கின்றனர். இவற்றுடன் சில காப்புறுதி நிறுவனங்களும் பிற வாணிப நிறுவனங்களும் தொடர்புபடுவதுண்டு. வெளிநாட்டுப் பரிமாற்ற முகவர்களுக்கிடையிலான வாணிபம் மிகவும் பெரிதாக இருந்து, நூற்றுக்கணக்காக மில்லியன் டொலர்கள் அதில் உள்வாங்கப்படுகின்றன. வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை பன்னாட்டு வணிபத்திற்கும் முதலீட்டிற்கும் நாணய மாற்றம் செய்வதால் உதவுகின்றது. எ.கா: அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அமெரிக்க டாலர்களில் வருவாய் இருக்கும்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் இருந்து, குறிப்பாக ஐரோ வலய அங்கத்துவ நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், ஐரோக்களில் பணத்தை அளிக்கவும் இது வியாபாரத்தை அனுமதிக்கிறது. அத்துடன் இது நாணயங்களின் பெறுமதிக்கேற்ப நேரடி ஊகத்திற்கும் மதிப்பீட்டிற்கும் உதவுவதுடன், நிகழும் வணிபம், இரு நாணயங்களுக்கிடையிலான வட்டி விகித வேறுபாட்டு அடிப்படை ஆகியவற்றின் ஊகத்திற்கும் உதவுகின்றது.[2]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Record, Neil, Currency Overlay (Wiley Finance Series)
  2. Global imbalances and destabilizing speculation பரணிடப்பட்டது 2016-10-17 at the வந்தவழி இயந்திரம் (2007), UNCTAD Trade and development report 2007 (Chapter 1B).

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Foreign exchange market
என்பதில் ஊடகங்கள் உள்ளன.