வெளியன் வேள்

வெளியன் வேள் சங்ககால வேளிர் குடிப் பெருமகன்.
இவனது மகன் ஆய் எயினன்.
மகள் நல்லினி

இவர்கள் உறவு முறையால் சேர மன்னர்களோடு இணக்கமாக வாழ்ந்தனர். நன்னன் சேரர்களுக்குப் பகைவன். நன்னனின் படைத்தலைவன் மிஞிலி வெளியன் வேள் மகன் ஆய் எயினனைப் போரில் வீழ்த்தினான்.

வெளியன் வேள் மகனைப் புலவர் பரணர் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 208
மகளைப் பதிற்றுப்பத்து பதிகம் குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்து பதிகம் 2

அடிக்குறிப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளியன்_வேள்&oldid=2566245" இருந்து மீள்விக்கப்பட்டது