வெளி கூனங்குறிச்சி

வெளி கூனங்குறிச்சி (veli kunankurichi) கிராமம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். விருத்தாச்சலம்-நெய்வேலிக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது.

தொழில்

தொகு

இவ்வூரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் அருகில் இருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்(NLC) வழங்கும் வேலை வாய்ப்பை பொறுத்து உள்ளது.

மதம் மற்றும் சமூகம்

தொகு

இவ்வூரின் மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுபவர்கள்.வன்னியர் சமூகத்தினர் மட்டுமே வாழும் கிராமம் இது[சான்று தேவை].

திருவிழா

தொகு

இவ்வூரில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் என்ற தேவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் இவ்வூர் தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெறும்.அதன் பின்பு ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் 16ம் தேதி புனித ஆரோக்கிய நாதர் தேர் திருவிழா நடைபெறும். இந்த ஊரில் புனித அந்தோணியாருக்கு ஒரு குருசடியும்,தேவமாதா,புனித ஆரோக்கியநாதர்,புனித குழந்தை இயேசு மூவருக்கும் சேர்த்து ஒரு குருசடியும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_கூனங்குறிச்சி&oldid=1611416" இலிருந்து மீள்விக்கப்பட்டது