வெளி ரங்கராஜன்
வெளி ரங்கராஜன் என தமிழ் இலக்கிய வட்டாரங்களில் அறியப்படும் இவரது இயற்பெயர் ரங்கராஜன். இலக்கியம், நாடகம், நிகழ்கலைகள் குறித்த ஆழ்ந்த ஈடுபாடுகளுடன் அவைகளுக்கு இடையிலான ஊடாட்டம் குறித்த உரையாடல்களை தமிழில் முன்னெடுத்து வருபவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுதிருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். கணிதத்தில் முதுகலைப்பட்டமும் இந்தியில் எம்.ஏ. பட்டமும் பிரெஞ்சு மொழியில் பட்டயம் (டிப்ளோமா) பட்டமும் பெற்றவர். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய இவர் தற்போது முழுநேர கலாச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இலக்கிய ஆர்வம்
தொகுமாணவப் பருவத்திலிருந்தே கலை, இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் பணி நிமித்தமாக சென்னை வந்ததும் இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாகப் பங்கேற்றார். நவீன இலக்கியம் சார்ந்து கணையாழி, கசடதபற, பிரக்ஞை, இன்று, படிகள், காலச்சுவடு போன்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளில் இலக்கியவிமர்சனம், கதை, கவிதை என பங்களிப்புகள் செய்தவர்.
நாடகவியலில் பங்களிப்பு
தொகுதமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் "வெளி" என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தினார்.[1] புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் செயல்பாட்டிற்கான களமாகவும் ஆவணமாகவும் வெளி இதழ் பயன்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய நாடகங்களும், மொழிபெயர்ப்பு நாடகங்களும் வெளி இதழ்களில் பிரசுரமாயின.
1994இல் இலங்கையில் நடந்த நாடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு 'மரபும் மாற்றங்களும்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கியவர். புதிய நாடகங்களை இயக்கியும், இசை நடனம் போன்ற நிகழ்கலைகளில் சமகால நுண்ணுணர்வுக்கான பொறிகளை அடையாளப்படுத்தியும் கலை இலக்கியத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவருபவர்.
இவரது நூல்கள்
தொகு- தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை (2003)
- இடிபாடுகளுக்கிடையில்
- நாடகம் நிகழ்வு அழகியல்
- ஊழிக்கூத்து
- வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
- புத்தகங்கள் பார்வைகள்
- தமிழ் நவீன நாடக நிகழ்வுகள்
- சமகால இலக்கிய உரையாடல்கள்
- இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்
- உடல்மொழியின் கலை
- தற்காலத் தமிழ் நாடகங்கள் தொகுப்பு
- வெளி இதழ் தொகுப்பு
- புரிசை கண்ணப்ப தம்பிரான் தொகுப்பு நூல்
- இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை - கு.அழகிரிசாமி
- நடுக்கடலில்(மொழிபெயர்ப்பு நாடகங்கள்) தொகுப்பு
- இலக்கியக் குரல்கள்
- தமிழ் நவீன நாடக வரலாறும் அழகியலும்
- கலையும் மனப்பிறழ்வும் (மொழிபெயர்ப்பு கட்டுரைகள்)
- வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம் (தொகுப்பு)
இவரது நாடக நிகழ்வுகள்
தொகுஅகலிகை,வஞ்ச மகள்,மாதவி,ஊழிக்கூத்து,மாதரி கதை,ஆற்றைக் கடத்தல்,அன்பின் பெருவெளி ஆண்டாள்,காலம் காலமாக,கொடுங்கோலர்கள்,பெர்னாதா இல்லம்,மரண வீட்டின் குறிப்புகள்,காற்று மற்றும் பல குறுநாடகங்கள்
விருதுகள்
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது,ராஜபாளையம் பீமராஜா அறக்கட்டளை விருது,சென்னை இலக்கியக் கழக விருது,எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவு இலக்கிய விருது,கலைஞர் பொற்கிழி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ "வெளி ரங்கராஜன்". பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.