வெள்ளிக்கெண்டை மீன்

வெள்ளிக்கெண்டை மீன் (silver carp) சீன நாட்டைச் சேர்ந்த கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும்.[1] இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

தோற்றம் தொகு

இது வெள்ளி போன்று, பளிச்சிடும் வெண்மை நிறம் கொண்டது. இம்மீனின் வாய் மேல் நோக்கி அமைந்திருக்கும்.

உணவுப் பழக்கம் தொகு

இது குளத்தின் மேல் மட்டத்தில் உள்ள, தாவர நுண்ணுயிர்களை மட்டுமே சலித்து உண்டு வளர்வதால் இவை கடலா மீனுடன் உணவுக்கு போட்டி போடுவதில்லை. இவை கடலா மீனைவிட வேகமாக வளர்கவை. இது ஓர் ஆண்டில் 1.5 முதல் 2 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[2]

இனப்பெருக்க காலம் தொகு

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இயற்கை சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையிலும் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.[3]

தமிழ்நாட்டில் இறக்குமதி தொகு

இந்த மீன்கள் தமிழக மீன்வளத்துறையால் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1959 இல் சீனாவிலிருந்து, இறக்குமதி செய்யப்பட்டது.[4]

உசாத்துணை தொகு

  1. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Hypophthalmichthys molitrix" in FishBase. April 2006 version.
  2. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
  3. காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை
  4. என்.சுவாமிநாதன் (29 ஏப்ரல் 2018). "காலம் மறைத்த இரண்டாவது அமைச்சர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளிக்கெண்டை_மீன்&oldid=3578301" இலிருந்து மீள்விக்கப்பட்டது