வெள்ளீசுவரர் கோவில், மாங்காடு
வெள்ளீசுவரர் கோயில் ( Velleswarar Temple ) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையின் புறநகரான மாங்காடு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலாகும். 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது மங்காட்டிலுள்ள 3 பிரதான கோயில்களான வைகுண்ட பெருமாள் கோயில் காமாட்சி அம்மன் கோயில் போன்றது. இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இது மங்காட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வெள்ளீசுவரர் கோவில், மாங்காடு | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | மாங்காடு (காஞ்சிபுரம்) |
கோயில் தகவல்கள் |
புராணம்
தொகுஇந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து புராணங்களின்படி சுக்கிரன் ( வெள்ளி கோள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது) இங்கு வணங்கப்படுவதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு.[1] எனவே, அவருக்கு வெள்ளிக்கிழமைகளில் பக்தர்களால் சிறப்பு பூசைகள் வழங்கப்படுகின்றன. இந்த கோயில் சென்னையைச் சுற்றியுள்ள நவகிரகக் கோயில்களின் ஒரு பகுதியாகும். சுக்ரன் தொடர்பாக தானியமான வெள்ளை அவரை இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அணுகக்ல்
தொகுமாங்காடு என்பது பூந்தமல்லிக்கு அருகிலுள்ள சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு வளர்ந்துவரும் நகராட்சி ஆகும். சென்னை நகரத்திலிருந்து பூந்தமல்லி சாலையில் செல்லும்போது, குமணன் சாவடிசந்திப்பில் இருந்து இடதுபுறம் சென்று மங்காட்டை அடைய வேண்டும். இந்த கோயில் நன்கு அறியப்பட்ட மங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது சென்னை சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது. பேருந்து, டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றிலும் செல்லலாம்.
குறிப்புகள்
தொகு- "Sri Velleswarar Temple". Archived from the original on 2019-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.