வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் வெள்ளூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் திருக்காமேசுவரர் என்றும், அம்பாள் சிவகாம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்தினை கி.பி ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழன் புணரமைத்து குடமுழுக்கு செய்துள்ளார். இச்செய்தி கல்வெட்டில் உள்ளது.[1]

வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):வில்வாரண்ய சேத்திரம்
அமைவிடம்
ஊர்:வெள்ளூர்
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருக்காமேஸ்வரர்
தாயார்:சிவகாமசுந்தரி
தல விருட்சம்:வில்வமரம்
தீர்த்தம்:ஐஸ்வரிய தீர்த்தம்
வரலாறு
தொன்மை:2000 ஆண்டுகள்

கோயில் அமைப்பு

தொகு

சிவாலயமானது இரண்டு நுழைவாயில்களைக் கொண்டது. ஒன்று தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்திதேவர் மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வ சிலைகள் உள்ளன.[1]

சன்னதிகள்

தொகு

மூலவரும் அம்பாளும்

தொகு

மூலவர் திருக்காமேசுவரர் சுயம்பு லிங்கம் ஆவார். இவரை மன்மதனும், ரதியும், திருமகளும் வழிபட்டுள்ளனர்.[1]

சிவாலயத்தின் தென் மேற்கில் விநாயகர் சன்னதியும், மேற்கே வள்ளி தெய்வானை உடனுறை சண்முகரின் சன்னதியும் உள்ளது. வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் ரதியுடன் மன்மதன் ஈசனை வணங்கியவாறு உள்ளனர். இதன் அருகே தலவிருட்சம் அமைந்துள்ளது. பக்தர்கள் வில்வ மரத்தினை திருமகளாக வழிபடுகின்றனர். ஆலயத்தின் வடக்கே திருமகள் சன்னதி உள்ளது.[1]

படக்கோப்பு

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 http://temple.dinamalar.com/New.php?id=1501