வெள்ளூற்று பெருமாள் கோவில்
வெள்ளூற்று பெருமாள் கோவில் (Velloottru perumal temple) [1][2]தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமம், 4-ஆவது வார்டுக்குட்பட்ட சூரியகிரி மலைத்தொடர் அடிவாரத்தில் இயற்கை எழில்மிகு தோற்றத்துடன் அமைந்துள்ள பழமையான விஷ்ணு கோவில். இக்கோவில் காணியாட்சி வேட்டுவக்கவுண்டர் சமூகத்தினருக்குதான், முதல் உரிமை அனைத்தும் வழங்கப்படும். இக்கோவிலின் முதன்மைக் கடவுளான விஷ்ணு, வெள்ளூற்றுப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
வெள்ளூற்று பெருமாள் கோவில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | ஸ்ரீதேவி பூதேவி சமேத வெள்ளூற்று பெருமாள் திருக்கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் |
அமைவிடம்: | சூரியகிரி மலைத்தொடர் அடிவாரம், அரசிராமணி கிராமம், சங்ககிரி வட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | சங்ககிரி |
மக்களவைத் தொகுதி: | நாமக்கல் |
கோயில் தகவல் | |
மூலவர்: | விஷ்ணு |
குளம்: | கோவிலின் வடக்கு பகுதியில் கோவில் குளம் அமைந்துள்ளது |
சிறப்புத் திருவிழாக்கள்: | புரட்டாசி மாதம் உற்சவர் உலா வருதல், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதிசி மற்றும் அனுமன் ஜெயந்தி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
அமைவிடம்
தொகுசேலம் மாவட்டத்திலுள்ள, சங்ககிரி வட்டத்திற்குப்பட்ட , அரசிராமணி கிராமத்திலுள்ள குள்ளம்பட்டிக்கு கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சூரியகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். வெள்ளூற்று பெருமாளை தரிசிக்க சேலம் மார்கமாக வரும் பக்கதர்கள் இடைப்பாடி பஸ்நிலையம் சென்று அங்கிருந்து பவானி, குமாரபாளையம் செல்லும் பேருந்தில் பயணித்து குள்ளம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடைந்துவிடலாம்.
கோவில்
தொகுஇக்கோவிலில் முதன்மைக் கடவுளாக விஷ்ணு, வெள்ளூற்று பெருமாள் என்ற பெயருடன் கிழக்குமுகமாகக் காட்சி தருகிறார். இக்கோவிலில் ஆஞ்சநேயர், விநாயகர் , முருகன் மற்றும் கருடாழ்வார் சன்னதிகள் உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதி மூலவருக்குக்கு எதிரில் அமைந்துள்ளது, ஆஞ்சநேயர் மேற்கு முகமாக மூலவரை பார்த்தவாறு காட்சி தருகிறார். விநாயகர் சன்னதி மூலவருக்குக்கு வலப்புறத்தில் குளக்கரையில் கிழக்கு முகமாக பார்த்தவாறு காட்சியளிக்கிறார். முருகன் மூலவருக்கு தென்மேற்கு திசையில் காட்சியளிக்கிறார். கருடாழ்வார் மூலவருக்கு தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
திருவிழாக்காலம்
தொகுபுரட்டாசி மாதம் நான்கு புரட்டாசி சனிக்கிழமை தினத்திலும் புரட்டாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் அன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத வெள்ளூற்று பெருமாள் உற்சவர் கோவிலை உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதிசி தினத்தில் வெள்ளூற்று பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் தினத்தில் (அனுமன் ஜெயந்தி) ஆஞ்சநேயருக்கு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் .
பூஜை காலம்
தொகுவெள்ளூற்று பெருமாள் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஒவ்வொரு பிரதிமாத முதல் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் ஆஞ்சநேயருக்கு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் .
படத்தொகுப்பு
தொகு-
கோவிலின் முன்புறத்தோற்றம் கிரடி கம்பத்துடன்
-
புரட்டாசிக் கிழமையில் உற்சவர் கோவிலை வலம் வரும்போது
-
உற்சவர் உலா வருவதற்கு தயாராக இருந்தபோது
-
உற்சவர் வருகையின்போது
-
உற்சவர் உலா வருகையில் பக்தர்கள் கோவில் மண்டபத்தின் மேல் இருந்து ஆசி பெறும் காட்சி
குறிப்புகள்
தொகு- ↑ "மாவட்டம் முழுவதும் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா". தினத்தந்தி. http://www.dailythanthi.com/Others/Devotional/2016/01/10032523/In-temples-across-the-district--Hanuman-Jayanti-Festival.vpf. பார்த்த நாள்: January 10, 2016.
- ↑ "பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு". தினகரன். http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=631151. பார்த்த நாள்: Septemper 27, 2016.[தொடர்பிழந்த இணைப்பு]