வெள்ளையானை (புதினம்)
வெள்ளையானை ஜெயமோகன் எழுதிய நாவல். எழுத்து பிரசுரம், மதுரை இதை வெளியிட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் 1877ல் வந்த மாபெரும் பஞ்சத்தின் பின்னணியில் இந்தியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம் என்று சொல்லப்படும் ஒரு கிளர்ச்சியைப்பற்றி எழுதப்பட்ட நாவல் இது. சென்னை ஐஸ்ஹவுசில் இந்தப் போராட்டம் நடந்தது. வெள்ளையானை என்பது பனியைக் குறிப்பிடுகிறது.[1]
கதைச் சுருக்கம்
தொகுஎய்டன் பைர்ன் என்ற அயர்லாந்து காவல்துறை அதிகாரியின் பார்வையில் சொல்லப்படும் கதை இது. ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் ஒருவர் தாக்கப்படுவதைக் கண்டு அதை விசாரிக்கச் செல்கிறான் எய்டன். அங்கே அந்தத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுவதைக் காண்கிறான். காணாமல்போன அந்த தொழிலாளர்களைத் தேடிச் செல்பவன் கறுப்பர் சேரி எனப்படும் தலித் குடியிருப்புகளைக் காண்கிறான். அந்த மக்கள் அனைவரும் பெரும் பஞ்சத்தின் விளைவான அகதிகள் என்பதை அறிகிறான். அந்தப் பஞ்சத்தை நேரில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைகிறான்
பஞ்சத்தை வெள்ளை அரசு செயற்கையாக உருவாக்கியது என்பதை அறிகிறான் எய்டன். அந்தப் பஞ்சத்தை அரசு நினைத்தால் தவிர்க்கமுடியும் என நினைத்து அதற்கு முயல்கிறான். அரசு அவனை தன் ஊழலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறது. எய்டன் ஐஸ்ஹவுஸில் ஒரு போராட்டத்தை உருவாக்குகிறான். அது ஒடுக்கப்படுகிறது
முக்கியத்துவம்
தொகுஇந்நாவல் இந்தியாவின் தலித் மக்களின் எண்ணிக்கையில் நேர்பாதி[சான்று தேவை] செத்து அழிந்த பஞ்சத்தின் சித்திரத்தை அளிக்கிறது. ஒருபக்கம் வெள்ளையரும் மறுபக்கம் சாதிவெறியர்களும் அதற்கு பொறுப்பு என்று காட்டுகிறது. இந்தியாவின் முதல் தலித் எழுச்சியின் சித்திரமும் இந்த நாவலில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை". திண்ணை. https://puthu.thinnai.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/. பார்த்த நாள்: 8 February 2022.