வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து

வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து (Havørn Accident) (நோர்வே மொழி:Havørn-ulykken) ஒரு வானூர்தி விபத்தாகிய இது, 1936 ஆம் ஆண்டு, சூன் 16 இல், "ஜங்கர்ஸ் யூ 52" (Junkers Ju 52) வகையை சார்ந்த வானூர்தி ஒன்று நோர்வேயின் ஒரு மூடுபனி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 'நோர்வேஜியன் ஏர்லைன்ஸ்' (Norwegian Air Lines) (பதிவு எண்:LN-DAE) நிறுவனம் இயக்கிய இவ்வானூர்தி, நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நகரிலிருந்து 'திரோம்சோ' (Tromsø) நகருக்கு தொடர்ப் போக்குவரத்து சேவையை வழங்கிவந்தது.[1]

வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து
'நோர்வேஜியன் ஏர்லைன்ஸ்' இயக்கிய இதே போன்ற 'ஜங்கர்ஸ் ஜு 52' வானூர்தி, 1939
விபத்து சுருக்கம்
நாள்1936, சூன் 16
சுருக்கம்நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி
இடம்"லிகெச்டேன்", கைலீஸ்டத்,  நோர்வே
61°09′25″N 5°09′50″E / 61.1569°N 5.1639°E / 61.1569; 5.1639
பயணிகள்3
ஊழியர்4
உயிரிழப்புகள்7
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஜங்கர்ஸ் யூ 52
இயக்கம்'நோர்வேஜியன் ஏர்லைன்ஸ்'
வானூர்தி பதிவுLN-DAE
பறப்பு புறப்பாடுபேர்கன்
சேருமிடம்'திரோம்சோ'

நிகழ்விடம்

தொகு
 
விபத்து நிகழ்ந்த 'லிகெச்டேன்' பகுதி

ஐரோப்பாவின் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நோர்வே நாட்டில் "சோகன் ஒக் பிஜோர்டனே" (Sogn og Fjordane) எனும் நகராட்சிக்கு உட்பட்ட "லிகெச்டேன்" (Lihesten) பிராந்தியத்தில் உள்ள, கைலீஸ்டத் (Hyllestad) கிராமத்திலிருந்து கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள மூடுபனி மலைப் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.[2]

உயிரிழப்புகள்

தொகு

நோர்வேயின், முதல் அபாயகரமான போக்குவரத்து வானூர்தி விபத்தாக கருதப்படும் இவ்விபத்து, விமானிகள் இணையாகத் திட்டமிட்டுப் பறக்க தவறியதால், கிழக்கில் மேலும் 15-முதல் 20 கிலோமீட்டர் (9.3 12.4 மைல் வரை) பறக்க உடனடியாக நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட (controlled flight into terrain (CFIT) இந்த வானூர்தி விபத்தில், சேவைப் பணியாளர்கள் நால்வரும், பயணிகள் மூவரும், மொத்தமாக 7 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.[3]

உசாத்துணை

தொகு
  1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996–2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-31.
  2. "Tag Archives: Havørn Accident". travelmuch.net (ஆங்கிலம்). SEP 8 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.