வேசா ஆறு
வேசா ஆறு (Veshaw River) என்பது இந்தியாவின் சம்மு-காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள குல்காம் மாவட்டத்தில் ஓடும் ஜீலம் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். இது பிர் பாஞ்சால் மலைத்தொடரில் உருவாகி அகர்பலில் ஒரு நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது.[1]
வேசா ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மண்டலம் | காசுமீர் பள்ளத்தாக்கு |
மாவட்டம் | குல்காம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | 33°30′44″N 74°46′08″E / 33.512287°N 74.768780°E |
⁃ அமைவு | கவுசர் நாக் |
⁃ ஏற்றம் | 3,500 m (11,500 அடி) |
முகத்துவாரம் | 33°49′05″N 75°03′58″E / 33.818°N 75.066°E |
⁃ அமைவு | இராம்பி ஆரா, சங்கம் அருகில் |
⁃ உயர ஏற்றம் | 1,600 m (5,200 அடி) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | இராம்பி ஆரா |
⁃ வலது | ஜீலம் ஆறு |
ஆற்றோட்டம்
தொகுகுல்காம் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒலிகோட்ரோபிக் ஏரியிலிருந்து இந்த ஆறு உருவாகிறது. இந்த ஆறு அகர்பலில் ஒரு நீர்வீழ்ச்சியை உருவாக்கி, அடாபல், நேகாமா, அடிஜென், லைசூ, குடர், பிராசுலூ, அசுமோஜி, கேலம், நவாப்போரா, கைமோ வழியாகச் சென்று சங்கமத்தில் ஜீலம் நதியுடன் இணைகிறது.[2]
வெள்ளம் பெருக்கு
தொகு2014ஆம் ஆண்டு வேசா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், லைசூ, ஆர்டிகட்னோ, குண்ட்கேலம் குல்காம் போன்ற கிராமங்களில் உள்ள பல்வேறு குடியிருப்பு வீடுகளையும், லைசூ குல்காம் கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சதுரக் கன்னல்களையும் (தோட்டக்கலை மற்றும் விவசாய நிலங்களின் பகுதிகள்) அடித்துச் சென்றது. வேகமான ஓட்டம் மற்றும் அடிக்கடி திடீர் வெள்ளம் காரணமாக வேசா ஆறு ஜீலம் ஆற்றின் ஆபத்தான துணை ஆறாகக்கருதப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Home". kulgam.gov.in.
- ↑ "Google Maps". Google Maps (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-29.
- ↑ Service, Tribune News. "13 houses washed away in Kulgam flash floods". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.