வேடுபறி நிகழ்ச்சி

சோழப் பேரரசில் படைத்தலைவராக இருந்த திருமங்கைமன்னன், திருவரங்கப் பெருமாளிடம் கொண்ட பக்தியால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்தார். போதுமான நிதியில்லாத நிலையில், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டு திருப்பணியை தொடர்ந்தார். அவரை திருத்துவதற்காக மாறுவேடத்தில் வந்த பெருமாளையும் வழிமறித்தார் திருமங்கைமன்னன்.

அப்போது பெருமாள், திருமங்கைமன்னன் காதில் ‘ஓம் நமோ நாராயணா‘ என்ற மந்திரத்தை ஓதினார். இதன் மகிமையால் திருமங்கைமன்னன் மனம் திருந்தி திருமங்கையாழ்வாராக மாறினார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில்வேடுபறி நிகழ்ச்சி எனும் பெயரில் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத இராப் பத்து திருவிழாவின் எட்டாம் நாள் மாலையில் பக்தர்களுக்கு நடத்திக் காண்பிக்கப்படுகிறது.[1].[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=898234&Print=1
  2. வேடுபறி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடுபறி_நிகழ்ச்சி&oldid=3229361" இலிருந்து மீள்விக்கப்பட்டது