வேதா இலங்காதிலகம்

வேதா இலங்காதிலகம் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர். கோப்பாய் எனும் ஊரில் பிறந்த வேதா, இலங்கையின் களுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்காதிலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். புலம்பெயெர்ந்து 1986-ல் டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள் ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வேதா இலங்காதிலகம்

தந்தை நகுலேசுவரர் ஊக்குவிப்பால் 1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் துவங்கிய இவர் சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.

வெளியான நூல்கள்

தொகு
  • வேதாவின் கவிதைகள் - கவிதைகள் (2003)
  • குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004)
  • உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) (இந்நூல் இவர் கணவருடன் இணைந்து செய்யப்பட்ட நூல்)
  • பெற்றோரியலில் சிற்றலைகள் - (2018) - சிறுகட்டுரைகள் பிள்ளை வளர்ப்பு, இளையோர் பற்றியதும் + வேதாவின் ஆத்திசூடி +பெற்றோர் மாட்சி பற்றிய மொழிகளடங்கிய நூல்
  • குறள் தாழிசை - (2018) (திவான்பகதூர் பாவாந்தபிள்ளையின் யாப்பருங்கல விருத்தியுரையின்படிஇரண்டிரண்டாய் ஈற்றடி குறைந்த இஃது) கவிதை மொழியில் 23 அங்கங்கள்  குறள் + வேதாவின் மொழிகள்  + 25 சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதா_இலங்காதிலகம்&oldid=3229374" இலிருந்து மீள்விக்கப்பட்டது