வேத்தியல் என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் இரண்டு உள்ளன. இந்தத் துறை புறநானூற்றில் கரந்தைத்திணையில் வருகிறது.

இலக்கியம்

தொகு
  • வெள்ளாட்டுத் தாடி மயிர் போலத் தன் படைவீரர்களாகிய இளையர் பலர் இருக்கும்போது அரசன் தான் முன்னேறிப் போரிட்டுப் பகைவர் வாளால் உயிர் துரந்திருக்கிறான். அவனைக் காலில்லாக் கட்டிலில்(பாடையில்) கிடத்தித் தூய வெள்ளாடை போர்த்திச் சிறப்புச் செய்யுங்கள். ஔவையார் சொலுகிறார். [1]
  • துடி முழக்கியும், ஒப்பாரிப் பெண்களும் வெள்ளாடை போர்த்திக் கிடக்கும் மாயவன் போன்ற அரசனைக் கழுகுகள் தின்னாமல் காப்பாற்றட்டும். நான் விளரிப்பண் பாடி நரியை ஓட்டுகிறேன் என்கிறார் புலவர் நெடுங்கழுத்துப் பரணர் [2]

இலக்கணம்

தொகு

தொல்காப்பியம் இதனைச் சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தல் [3] எனக் குறிப்பிடுகிறது.

புறநானூறு வேத்தியல் எனக் குறிப்பிடும் துறையைப் புறப்பொருள் வெண்பாமாலை வேத்தியல் மலிபு எனக் குறிப்பிடுகிறது. [4] இதற்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ள பாடல் அரசன் தன் ஆட்சிக் குடையில் பெறும் செல்வத்தை விட பகைவர் வாளால் உயிர் துறந்த செல்வம் மேலானது என்று கூறுகிறது.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 286
  2. புறநானூறு 291
  3. தொல்காப்பியம், புறத்திணையியல் 7
  4. தோள் வலிய வய வேந்தனை
    வாள் வலி மறவர் சிறப்பு உரைத்தன்று. புறப்பொருள் வெண்பாமாலை 34.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத்தியல்&oldid=1274379" இலிருந்து மீள்விக்கப்பட்டது