வேப்பத்தூர் கைலாசநாதர் கோயில்

வேப்பத்தூர் கைலாசநாதர் கோயில் என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1]

அமைவிடம்

தொகு

இக்கோயில் மதுரையிலிருந்து 40 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு மதுரையில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.

தொன்மம்

தொகு

பாண்டிய மன்னன் ஒருவன் பிள்ளைப் பேறு இன்றி வருந்திவந்தான். அவன் தன் இராச குருவின் அறிவுருத்தலில் இத்தலத்திற்கு வந்து புத்திரகாமோஷ்டி யாகம் நடத்தி வனங்கினான். அதையடுத்து மன்னனுக்கு குழந்தைப் பேறு கிட்டியது. இதனால் மகிழ்ந்த மன்னன் இக்கோயிலை கற்றளியாக எழுப்பினான் என்ற கதை உள்ளது.

கோயில் அமைப்பு

தொகு

கோயிலினெ எதிரே மிகப் பெரிய தீர்த்தள் குளம் அமைந்துள்ளது. சாலக் கோபுர முகப்புடன் உள்ள கிழக்கு வாயிலைத் தாண்டியதும், முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. முக மண்டபத்தில் பலிபீடம், நந்தி தேவர் பீடம் ஆகியன அமைந்துள்ளன. இதன் வலது புறம் காலபைரவர், ஆவுடை நாயகியம்மன் சந்நிதிகள் உள்ளன. மகா மண்டபத்தின் வடப்புறம் தில்லை நடராசர் சந்நிதியும், தென்புறம் ஒரு வாசலும் அமைந்துள்ளன. கருவறையில் இலிங்க வடிவில் கைலாசநாதர் உள்ளார்.[2]

வழிபாடு

தொகு

இக்கோயியில் நான்கு கால பூசைகள் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kailasanathar Temple : Kailasanathar Kailasanathar Temple Details - Kailasanathar- Vembathur - Tamilnadu Temple - கைலாசநாதர்". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "எண்ணங்களை வண்ணங்களாக்கும் வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர்". 2024-08-01. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)