வேம்பத்தூர்

சிவகங்கை மாவட்ட சிற்றூர்

வேம்பத்தூர் (Vembathur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] இந்த ஊர் மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 33-இல் அமைந்துள்ளது. வேம்பத்தூர், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். வேம்பத்தூரின் தொலைபேசி குறியீடு எண் 04574 ஆகும்.

வேம்பத்தூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
630 565

அமைவிடம்

தொகு

வேம்பத்தூர், சிவகங்கைக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவிலும், மானாமதுரைக்கு 11 கி.மீ. தொலைவிலும், மதுரைக்கு கிழக்கே 38 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த சிற்றூர்களாக மலைராயனேந்தல், கல்லூரணி, திருப்பாச்சேத்தி, இடைக்காட்டூர் கானூர், வி. புதுக்குளம் ஆகியவையும், அருகமைந்த நகரங்களாக மானாமதுரை, சிவகங்கை, மதுரை, பரமக்குடி ஆகியவை உள்ளன.[2]

வரலாறு

தொகு

வேம்பத்தூர் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் தென் களவழிநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் அடங்கி இருந்தது. அப்போது இது வேம்பற்றூர் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த ஊரின் பெயர் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. கி. பி. 1050 இல் உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்றும், கி. பி. 1118-1135 இல் விக்ரம சோழ சதுர்வேதி மங்கலம் என்றும், கி.பி. 1300 இல் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்றும் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறியுள்ளது.[3]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேம்பத்தூரின் மக்கள்தொகை 4,627 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 1,111 (24.01%) உள்ளனர். இந்த ஊரில் 1259 வீடுகள் உள்ளன. மக்கள்தொகையில் பெண்கள் 49.4% ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 484 ஆகவுள்ளனர். ஊரின் சராசரி எழுத்தறிவு 71.42 % ஆகும். [4]

போக்குவரத்து

தொகு

சிவகங்கை, மதுரை, திருப்பாச்சேத்தி மற்றும் மானாமதுரையிலிருந்து வேம்பத்தூருக்கு பேருந்து வசதியுண்டு. வேம்பத்தூருக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், திருப்பாச்சேத்தி மற்றும் மதுரை (35 கிமீ) ஆகும்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

வேம்பத்தூரில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த ஊருக்கு உ. வே. சாமிநாதையர் வந்தது குறித்து எழுதியுள்ளார். இந்த ஊருக்கு காளமேகப் புலவர் வந்ததாக செவிவழி செய்தி உள்ளது. வேம்பத்தூர் புலவர்கள் முன் அடைமொழி வீரை என்ற பெயராலும் அறியப்படுகிறது. அவர்களில் சிலர் பின்வருமாறு

கல்வி நிலையங்கள்

தொகு
  • அரசு மேனிலைப் பள்ளி, வேம்பத்தூர்

வங்கிகள்

தொகு

வழிபாட்டுத் தலங்கள்

தொகு
  • கைலாசநாதர் கோயில்
  • நவநீதகிருஷ்ணன் கோயில்
  • சுந்தராஜ பெருமாள் கோயில்
  • தொட்டிச்சியம்மன் கோயில்
  • கருப்பணசாமி கோயில்
  • விநாயகர் கோயில்
  • கன்னிமார் கோயில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Vembathur Village , Manamadurai Block , Sivaganga District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-08.
  2. Vembathur
  3. "எண்ணங்களை வண்ணங்களாக்கும் வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர்". 2024-08-01. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  4. Vembathur Population - Sivaganga, Tamil Nadu

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பத்தூர்&oldid=4058904" இலிருந்து மீள்விக்கப்பட்டது