இடைக்காட்டூர்

இடைக்காட்டூர், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த கிராமமாகும்[1]. இவ்வூர் சிவகங்கையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில், மதுரை-இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், முத்தநேந்தல் எனும் கிராமப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வைகை ஆற்றின் வடகரையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் இடைக்காட்டூர் கிராமம் உள்ளது.

இடைக்காட்டூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
ஏற்றம்70 m (230 ft)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்18,658
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்630 560
தொலை பேசு குறியிடு எண்914574 XX
வாகனப் பதிவுTN 63
நவக்கிரக கோயில்
தூய இருதய கிறித்தவ தேவாலயம்

இடைக்காட்டூரில் தொன்மைமிக்க ஆதிகண்டீஸ்வரர் சிவாலயம் மற்றும் நவக்கிரக கோயில் உள்ளது.[2]

இடைக்காட்டூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தந்தை பெர்டினாந்து செல்லே (Ferdinandus Celle) என்பவர் 1864ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டுக் கோதிக் கட்டிடக் கலையில், சிலுவை வடிவத்தில் புனித நெஞ்சக் கிறித்தவ ஆலயத்தை கட்டினார்.[3][4][5][6] அருகில் உள்ள ஊர்கள் திருப்பாச்சேத்தி தெக்கூர் பெரிய கோட்டை பாப்பாங்குளம் பதினெட்டாங்கோட்டை முத்தனேந்தல் சிறுகுடி

வரலாறுதொகு

இக்கிராமத்தில் இடைக்காடர் எனும் சித்தர் நவக்கிரகங்களை மாற்றி வைத்த நவகிரக கோயில் உள்ளது.[7]

மக்கள் தொகைதொகு

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடைக்காட்டூர் கிராமத்தில் 18,658 மக்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 45 விழுக்காடும், பெண்கள் 45 விழுக்காடும், ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 10 விழுக்காடும் உள்ளனர். [8]

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=308
  3. "இடைக்காட்டூர் தேவாலயம்". 2016-03-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-04 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=308
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-04 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Sacred Heart Shrine , Idaikattur". 2015-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-04 அன்று பார்க்கப்பட்டது.
  7. Siddhar Idaikkadar
  8. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்காட்டூர்&oldid=3623001" இருந்து மீள்விக்கப்பட்டது