வேலூர் கலவரம் 1930–31

வேலூர் கலவரம் 1930-31 என்பது 1930-31 இல் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடந்த இனக் கலவரமாகும்.

நிகழ்வுகள்

தொகு

1930 ஆம் ஆண்டு சூன் 8 ஆம் நாள் நடந்த மதக் கலவரம் இந்த கலவரங்களில் முதன்மையானது ஆகும். முஹர்ரம் ஊர்வலத்தை நடத்திய ஒரு முஸ்லீம் குழுவினர், இந்து கோவிலைக் கடக்கும்போது, கோவிலில் உள்ள இந்து வழிபாட்டாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் உருவானது.  ] கலவரம் வெடிப்பதற்கான காரணம் ஊர்வலத்தில் இருந்த ஒருவர் கோவிலில் இந்து தெய்வத்தை அவமதிக்கும் விதமான ஒரு சைகை செய்தார் என்று கூறப்பட்டது. கலவரத்தைத் தொடர்ந்து வடாற்காட்டில் உள்ள உதயேந்திரத்தில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. மதராசு நகரில் கலவரம் ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் இருந்தது மேலும் மதராசு மாகாணம் முழுவதும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது.

1931 இல் வேலூரில் இரண்டாவது வகுப்புக் கலவரம் வெடித்தது. இது இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்களின் ஊர்வலம் மற்றும் மிலாதுன்-நபி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான முஸ்லீம்களின் ஊர்வலம் ஆகியவற்றுக்கு இடையிலான மோதலில் தோன்றியது. கலவரக்காரர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் முஸ்லீம் தலைவர் ஜனாப் அப்துல் ஜாபரின் வீடு 200 க்கும் மேற்பட்ட இந்துக்களின் கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டது, ஆனால் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. 1931 ஆகத்தில் இந்து பண்டிகை ஒன்றின்போது மூன்றாவது கலவரம் வெடித்தது.

குறிப்புகள்

தொகு
  • More, J. B. Prashant (1997). The Political Evolution of Muslims in Tamilnadu and Madras, 1930–1947. Orient Longman. pp. 94–95.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_கலவரம்_1930–31&oldid=3059798" இலிருந்து மீள்விக்கப்பட்டது