மீலாதுன் நபி

நபிகளின் பிறந்தநாள்

மீலாதுன் நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபு மொழி: مَوْلِدُ النَبِيِّmawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மீலாத் )என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும்.[1]

மீலாதுன் நபி, லாகூர் பாக்கித்தான்

மௌலித் என்ற வசனம் உலகின்,எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் பிறந்த தினத்தைக் குறிக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.[2]

பெயரியல்

தொகு

மௌலித் என்றச் சொல் பெற்றெடுத்தல், கருத்தரித்தல், வம்சாவளி என்ற பொருள்தருகின்ற அராபிய வேர்ச்சொல் (அரபு மொழி: ولد‎) இடமிருந்து பெறப்பட்டுள்ளது.இச்சொல்லுக்கு பிறப்பு, குழந்தையின் பிறப்பு, வம்சாவளி போன்ற கருத்துக்கள் வழங்கப்படுகின்றது.[3] தற்காலப் பயன்பாட்டில் இச்சொல் முகமது நபி பிறந்தநாளைக் குறிப்பதாகவே உள்ளது.[1] இந்நிகழ்வு ஏனைய சொற்களாலும் அழைக்ப்படுகின்றது.

  • பரா வபாத்
  • ஈத் அல்-மவ்லித் அந்-நபவி
  • ஈத் இ மீலாத்-உந் நபவி
  • ஈத் இ மீலாதுன் நபி

சட்டபூர்வத் தன்மை

தொகு

பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர்.[4] எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்.

பண்டிகை நாள்

தொகு

இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mawlid. Reference.com
  2. In pictures: Egypt's biggest moulid. BBC News.
  3. அரபு மொழி: قاموس المنجد‎ – Moungued Dictionary (paper), or online: Webster's Arabic English Dictionary
  4. ஆசிர்வதிக்கப்பட்ட மௌலித் பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம். தைத் சாகிர்.

உசாத்துணைகள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீலாதுன்_நபி&oldid=3351272" இலிருந்து மீள்விக்கப்பட்டது