வேலோர்வட்டம் மகாதேவர் கோயில்

வேலோர்வட்டம் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் சேர்த்தலாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்[1]. இக்கோயில் கி.பி.7ஆம் நூற்றாண்டில் ஆழ்வாஞ்சேரி தம்பிரக்கால் என்பவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. [2] புராணத்தின் படி, மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் பரிசளிக்கப்பட்ட இடமாக கேரளா கருதப்படுகிறது. இக்கோயில் மூலவர் பரசுராம முனிவரால் கொண்டு கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சில கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். சிவாலய சோத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 108 சிவாலயங்களில் இக்கோயில் ஒன்றாகும். இந்தக் கோயில் கட்டப்பட்ட சரியான காலம் தெரியப்படவில்லை. [3] கேரளாவில் உள்ள பல பிரபலமான குடும்பங்களுக்கு இக்கோயில் ஒரு குடும்ப கோயிலாகும்.

வேலோர்வட்டம் மகாதேவர் கோயில்

அமைவிடம்

தொகு

இக்கோயில் சேர்த்தலா நகரில் அமைந்துள்ளது. சேர்தலா கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு புறவழிச்சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Alappuzha District Siva Temples - Kerala - Talukwise listing of Mahadevar Ambalam".
  2. Kottaaraththil Sankunni (30 June 2015).
  3. Biju, Mathew (Sep 2017). Pilgrimage to Temple Heritage. Vol. 1 (Issue No. 10 ed.). Kacheripady, Kochi, India: Info Kerala Communications Pvt. Ltd. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-934567-0-5.