வேல் கண்ணன்

வேல் கண்ணன் (Vel Kannan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். 1974 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று சு. இராமசந்திரன்- இரா. ஜெயமணி தம்பதியருக்கு மகனாக இராமநாதபுரத்தில் பிறந்தார். உயிரோசை இணைய இதழில் 'தூரிகை இறகு' என்ற கவிதை முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.[1] மார்க்சியம், காந்தியம், தமிழ் தேசியம் ஆகியவற்றின் மீது ஈடுபாடு கொண்டு தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி போன்ற முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. இசைக்காத இசை குறிப்பு, பாம்புகள் மேயும் கனவு நிலம், லிங்க விரல் என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.

வேல் கண்ணன்
Vel Kannan
வேல் கண்ணன்
பிறப்பு22.07.1975
தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம்,
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைகவிதை, சிறுகதை, நாவல்
பணியிடங்கள்தனியார் நிதி நிறுவனம்
விருதுகள்எழுத்துக் களத்தின் நவீன இலக்கியக் கவிஞர் விருது
துணைவர்கவிதா
பிள்ளைகள்வேல்விழி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

1993-ஆம் ஆண்டு திருவண்ணாமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.

நூல்கள் தொகு

  1. இசைக்காத இசை குறிப்பு,[2] வம்சி பதிப்பகம் (2013)
  2. பாம்புகள் மேயும் கனவு நிலம்,[3] யாவரும் பதிப்பகம் (2018)
  3. லிங்க விரல்,[4] யாவரும் பதிப்பகம் (2023)

மேற்கோள்கள் தொகு

  1. "முதன் முதலாக". நுட்பம், இணைய கவிதை இதழ். https://nutpam.site/conversation/5296/. பார்த்த நாள்: 3 March 2024. 
  2. "இசைக்காத இசைக் குறிப்பு". நூல் உலகம். வம்சி. https://www.noolulagam.com/tamil-book/30273/isaikaatha-isai-kurippu-book-type-kavithaigal/. பார்த்த நாள்: 3 March 2024. 
  3. "சமகால பாதிப்பை படைப்பாக்க வேண்டும்! இலக்கிய கூட்டத்தில் அறிவுறுத்தல்". தினமலர். https://m.dinamalar.com/detail.php?id=2299206. பார்த்த நாள்: 3 March 2024. 
  4. "நூல் நயம்: தனித்திருக்கும் மனம்", Hindu Tamil Thisai, 2023-07-22, பார்க்கப்பட்ட நாள் 2024-03-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்_கண்ணன்&oldid=3903085" இலிருந்து மீள்விக்கப்பட்டது