வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்று
வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுப்பெற்ற பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] இக்கல்லூரி 2001இல் தொடங்கப்பட்டது.
குறிக்கோளுரை | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் |
---|---|
வகை | சுயநிதி |
உருவாக்கம் | 2001 |
முதல்வர் | முனைவர் எம். ஜெயராமன் |
மாணவர்கள் | 3214 |
அமைவிடம் | ஈரோடு- 638012 , , |
சேர்ப்பு | தன்னாட்சி |
இணையதளம் | www |
ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை சாலையில், திண்டல் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. அகில இந்திய தொழிற்நுட்ப கல்விமன்றத்தின் ஒப்புதலுடன் [2] வேளாளர் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டுவருகின்றது. [3] ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தரச்சான்றிதழ்கள்
தொகு- தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் ’ஏ+’ தரச் சான்று[4] பெற்றுள்ளது.
- தேசிய அங்கீகார வாாியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது.[5]
- பல்கலைக்கழக மானியக்குழுவின் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது.
துறைகள்
தொகுஇக்கல்லூரியில் பின்வரும் துறைகளில் இளநிலை பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- உயிர்மருத்துவப் பொறியியல்
- கணினி பொறியியல்
- தகவல் தொழிற்நுட்பவியல்
- மின்னியல் மற்றும் மின்னணுவியல்
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல்
- இயந்திரப் பொறியியல்
- கட்டட பொறியியல்
- மருத்துவ மின்னணுவியல்
இக்கல்லூரியில் பின்வரும் துறைகளில் முதுநிலை பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- பயன்பாட்டு மின்னணுவியல்
- வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்பெட்டேட் சிஸ்டம்ஸ் டெக்னாலஜிஸ்
- மேலாண்மை துறை
- கணினி பயன்பாட்டியல் துறை
சான்றுகள்
தொகு- ↑ https://www.annauniv.edu/cai/Affiliated%20Colleges%20list%20by%20Alphabetical/Affiliated%20Colleges%20-%20PDF%20Files/Velalar%20College%20of%20Engineering%20and%20Technology.pdf
- ↑ https://www.aicte-india.org/downloads/listallsouthmt.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-11. பார்க்கப்பட்ட நாள் 2018-04-16.