வைசாலி பாங்கர்

இந்திய அரசியல்வாதி

வைசாலி பாங்கர் (Vaishali Bankar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிர மாநிலம் புனே நகரின் ஐம்பத்தி இரண்டாவது மேயராக இருந்தார். [1] அந்தப் பதவியை வகிக்கும் ஏழாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். . 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற புனே மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வைசாலி பாங்கர்
Vaishali Bankar
புனேவின் 52ஆவது மேயர்
பதவியில்
16 மார்ச்சு – 12 ஆகத்து 2013
முன்னையவர்மோகன்சிங் ராச்பால்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
துணைவர்சுனில் பாங்கர்
வாழிடம்(s)அதப்சர், புனே
இணையத்தளம்http://vaishalibankar.com/

புனே நகரில் பொது சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டுவது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாக பாங்கர் உறுதி கூறினார். பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளே தனது முதன்மையான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.[2]

2013 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதி பாங்கர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பன்னாட்டு பயணங்கள் மேற்கொண்டதன் மீதான விமர்சனத்திற்குப் பிறகு பதவி விலகல் செய்தார். பதவிக்காலம் முடிவதற்குள் பதவிவிலகல் செய்த முதல் புனே மேயர் என்ற பெருமையையை இவர் பெற்றார். [3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_பாங்கர்&oldid=3873889" இலிருந்து மீள்விக்கப்பட்டது