வைட்டாஸ்கோப்

வைட்டாஸ்கோப் (Vitascope) 1895 ஆம் ஆண்டு சார்லசு பிரான்சிசு ஜென்கின்சும் தாமசு அர்மத்தும் இணைந்து காட்சிப்படுத்திய முதல் நிழற்பட திரையெறிவுக் கருவியாகும். இதனைப் பொதுமக்களுக்கு ஜோர்ஜியா மாநில அட்லான்டா நகரில் நடந்த பருத்தி கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இக்கருவிக்கு அவர்கள் பென்டோஸ்கோப் என பெயரிட்டிருந்தனர். இதன்மூலம் நிழற்படங்களை எதிரிலுள்ள சுவர் அல்லது திரையில் பலரும் காணும் வண்ணம் காட்ட முடிந்தது. தங்கள் சாதனையின் பின்னணியில் கண்டுபிடிப்பாளர்கள் இருவருக்குமிடையே காப்புரிமை குறித்து பிணக்கு எழுந்து இருவரும் பிரிந்தனர்.

வைட்டாஸ்கோப் குறித்த 1896 சுவரொட்டி விளம்பரம்

அக்காலகட்டத்தில் தாமசு எடிசனும் இத்தகைய கருவியொன்றினை வடிவமைப்பதில் ஈடுபட்டு வந்தார். அவரது நிறுவனம் தனிநபர்களுக்கான கைனெடோஸ்கோப் என்ற திரையெறிவுக் கருவியை விற்பனை செய்து வந்தது. பலரும் பார்க்கக்கூடிய பென்டோஸ்கோப் அவரது நிறுவன உரிமையாளர்களின் கவனத்தைக் கவரவே சட்ட உரிமை பெற்றிருந்த அர்மத்திடமிருந்து அதன் உரிமையை விலைக்கு வாங்கினர். அதனை மேம்படுத்தும் வேண்டுகோளை எடிசன் புதிய கருவி தமது கண்டுபிடிப்பாகப் பெயரிடப்பட்டாலே ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். இதன்படியே இக்கருவிக்கு வைட்டாஸ்கோப் என்று பெயரிட்டு அதற்கான நிழற்படங்களையும் தயாரித்தார்.[1][2][3]

1896 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 இல் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் வைட்டாஸ்கோப் மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

வைட்டாஸ்கோப் என்ற பெயரை 1930களில் வார்னர் சகோதரர்கள் நிறுவனம் தங்கள் பரந்ததிரை நெறிமுறைக்கு வணிகப்பெயராக பயன்படுத்தி வந்தனர்.

புற இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lathrop, George P. "Stage Scenery and the Vitascope." The North American Review 163.478 (1896): 377-381. JSTOR. Web. 18 Oct. 2014.
  2. Musser, Charles (1994). "The Vitascope". The Emergence of Cinema: The American Cinema to 1907 1.1 109-132. Gale Virtual Reference Library.
  3. David Coles, "Magnified Grandeur, Widescreen 1926-1931"
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைட்டாஸ்கோப்&oldid=4103605" இலிருந்து மீள்விக்கப்பட்டது