வைணவ குருபரம்பரை
வைணவ சமயம் வடகலை, தென்கலை என என இரு பிரிவாக உடைந்தது. வடகலையார் வடமொழி வழியிலான வைணவ நெறியைப் பின்பற்றினர். தென்கலையார் தமிழ்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல்நெறியைப் போற்றினர். தென்கலை நம்மாழ்வார் வழியில் பிற சமயக் காழ்ப்புணர்வு இல்லாதது. பிற சமயம் என்பது இங்கு வைணவம் அல்லாத பிற சமயங்களைக் குறிக்கும்.[1]
அட்டவணை
தொகு- இது வைணவ பரம்பரை என்னும் பகுதியோடு தொடர்புடையது.
எண் | வைணவ குரு | பிரிவு | காலம் | நூல் |
---|---|---|---|---|
1 | பின்பழகிய பெருமாள் ஜீயர் | பொது, தென்கலை | பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு | குரு பரம்பரா பிரபாவம் ஆறாயிரப்படி |
2 | பிரமதந்திர சுவதந்திர சுவாமி | வடகலை | பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டு | குரு பரம்பரா பிரபாவம் மூவாயிரப்படி |
3 | பிள்ளைலோகம் ஜீயர் | தென்கலை | பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டு | யதீந்திரப் பிரணவப் பிரபாவம் |
4 | ஸ்ரீ சடகோப யதீந்திர மகாதேசிகன் | வடகலை | அகோபில மட 23-ம் ஆசாரியர் | ஸ்ரீ சன்னிதி குருபரம்பரை |
5 | பார்வாச்சாரியார் | தென்கலை | - | குரு பரம்பரா பிரபாவம் பன்னீராயிரப்படி |
6 | திருமழிசை கோயில் கந்தாடை அண்ணா அப்பக்கர் | தென்கலை | - | குரு பரம்பரா பிரபாவம் மூவாயிரப்படி பழநடை விளக்கம் |
7 | மேல்நாட்டு ரங்காசாரியார் | வடகலை | - | குரு பரம்பரா பிரபாவம் மூவாயிரப்படி
நன்னடை விளக்கம், தென்னடை விளக்கம் |
இவற்றையும் காண்க
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑
அவரவர் தமதம(து) அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே. (நம்மாழ்வார் திருவாய்மொழி 1-1-5)