வேதியியலில், வைனைல் அல்லது வினைல் (Vinyl) அல்லது எத்தீனைல் (Ethenyl)[1] என்பது −CH=CH2 என்ற கட்டமைப்பைக் கொண்ட ஓர் அற்கீனைல் தொழிற்பாட்டுக் கூட்டம் ஆகும்.[2] எத்தீன் மூலக்கூற்றிலிருந்து (H2C=CH2) ஒரு நீரிய அணு அகற்றப்பட, வைனைல் தொழிற்பாட்டுக் கூட்டம் கிடைப்பதாகக் கருதலாம்.[3]

வைனைல் தொழிற்பாட்டுக் கூட்டத்தின் வேதிக் கட்டமைப்பு

தொழின்முறை முக்கியத்துவம் பெற்ற வைனைல் சேர்மமான பொலிவைனைல் குளோரைட்டும் வைனைல் என்றே பொதுவாக அழைக்கப்படுகின்றது.[4]

வைனைல் பல்பகுதியங்கள்தொகு

ஒருபகுதியம் பல்பகுதியம்
வைனைல் குளோரைடு பொலிவைனைல் குளோரைடு[5]
வைனைல் புளோரைடு பொலிவைனைல் புளோரைடு [6]
வைனைல் அசற்றேற்று பொலிவைனைல் அசற்றேற்று [7]
தைரீன் பொலித்தைரீன்[5]

தாக்கங்கள்தொகு

பொதுவாக, வைனைல் ஏலைடுகளில் கருநாட்டப் பதிலீட்டுத் தாக்கங்கள் நடைபெறுவதில்லை.[8] ஆயினும், கிறினாட்டின் வினைப்பொருளுடன் வைனைல் ஏலைடுகள் தாக்கமடையும்.[9]

இதனையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Preferred IUPAC Names Chapter 5". IUPAC (2004 அக்டோபர் 7). பார்த்த நாள் 2015 ஆகத்து 14.
  2. "Vinyl compound". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 ஆகத்து 14.
  3. "Vinyl group". UCLA Department of Chemistry & Biochemistry. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 5.
  4. Nikolas Davies & Erkki Jokiniemi (2012). Architect's Illustrated Pocket Dictionary. Routledge. பக். 529. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136444074. 
  5. 5.0 5.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 269. 
  6. "Polyvinyl fluoride (PVF)". Encyclopædia Britannica (2015 பெப்ரவரி 2). பார்த்த நாள் 2015 ஆகத்து 14.
  7. "Polyvinyl acetate (PVAc)". Encyclopædia Britannica (2014 மார்ச் 28). பார்த்த நாள் 2015 ஆகத்து 14.
  8. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 134. 
  9. Alan R. Katritzky, Otto Meth-Cohn, Stanley M. Roberts & Charles Wayne Rees (1995). Comprehensive Organic Functional Group Transformations, Volume 1. Elsevier. பக். 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080406046. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைனைல்&oldid=2355568" இருந்து மீள்விக்கப்பட்டது