வையாபுரி ஐயர்
வையாபுரி ஐயர் என்பவர் கிபி 14ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புலவர். பண்டத்தரிப்பு கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகல் என்னும் ஊரில் பிறந்தவர். சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் (1380 - 1414) காலத்தில் சமத்தானப் புலவராய் இருந்தவர்[1]. வையாபாடல் என்ற யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதியவர்.
இயற்றிய நூல்கள்
தொகு- வையாபாடல்
- பரராசசேகரன் உலா
- பரராசசேகரன் இராசமுறை
மேற்கோள்கள்
தொகு- ↑ கணபதிப்பிள்ளை, மு. தென்புலோலியூர், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், வெளியீடு: பாரி நிலையம், சென்னை. பக். 213.