பண்டத்தரிப்பு

இலங்கையில் உள்ள இடம்

பண்டத்தரிப்பு பண்டத்தரிப்பு_கிராம_அமைவிட அறிமுகம்

பண்டத்தரிப்பு
Gislanka locator.svg
Red pog.svg
பண்டத்தரிப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°46′22″N 79°58′03″E / 9.772897°N 79.967561°E / 9.772897; 79.967561
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


பண்டத்தரிப்பு (Pandatharippu) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்டத்திற்குட்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசெயலகம்(சண்டிலிப்பாய் ) ஆளுகைக்குள் அமைந்துள்ளதும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்காக

J/146( யா/146) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தனித்துவமான நிலப்பரப்பும் சனத்தொகையும் உடையதாக நகர கட்டமைப்புடன் காணப்படும் ஒரு அழகிய கிராமம் ஆகும். பண்டத்தரிப்பானது முன்னைய காலங்களில் பட்டினசபை எனப்படும் உள்ளூராட்சி கட்டமைப்பை கொண்டதாக  அதனையண்டிய அயல் கிராமங்களான   சில்லாலை, வடலியடைப்பு,  பிரான்பற்று, ஆகியவற்றை  அப்பட்டின சபையின் ஆளுகைக்குள் உள்ளடக்கியதாக காணப்பட்டது பிற்பட்ட காலங்களில் 1987ஆம் ஆண்டுகளில் பட்டின,கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிரதேசசபைகள் என்னும் புதிய உள்ளூராட்சி கட்டமைப்பின் கீழ் வலிதென்மேற்கு  மானிப்பாய் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கிராமமாகவும் அப்பிரதேசசபையில் நகரகட்டமைப்புடன் காணப்படும் மானிப்பாய் கிராமத்திற்கு அடுத்து நகரகட்டமைப்புடைய ஒரே ஒரு கிராமமாகவும் பண்டத்தரிப்பு விளங்கி வருகின்றது. 

பண்டத்தரிப்பு_என்னும்_பெயரின் வரலாற்று_பின்னனியும்_கிராமத்தின் வரலாற்று_சுருக்கமும்.

"பண்டத்தரிப்பு" என்கிற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாராலும் தெளிவாக கூறமுடியாவிட்டாலும் வெவ்வேறு காரணங்கள் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன. ஒருசிலர் பண்டைய காலங்களில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்றும் இதனால் தான் பண்டங்கள் தரித்து நிற்கும் ஊர் என்கிற காரணப் பெயரின் அடிப்படையில் பண்டத்தரிப்பு என பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள் . இதனை உறுதிப்படுத்துவதை போன்று வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு என்னும் நூலில் 149ஆம் பக்கத்தில் யாழ்ப்பாண மன்னர் காலத்திலேயே பண்டத்தரிப்பு ஒரு வணிகமையமாக இருந்தது என்கிறார் அத்துடன் ஒல்லாந்தர் கால குறிப்புக்களை உள்ளடக்கிய பால்தேஸ் பாதிரியார் எழுதிய A_Description_of_the_East-India_Coasts_of_Malabar_and_Coromandel என்கிற புத்தககுறிப்புக்களில் பண்டத்தரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதோடு பண்டத்தரிப்பை குறிப்பிடும் ஓவிய மாதிரியில் ஒல்லாந்த தேவாலயம் மற்றும் வணிககூடம் வியாபாரிகள் யானை, போன்ற விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே வணிக மையம் என்கிற அடிப்படையில் கடல் போக்குவரத்து மார்க்கமான மாதகல் துறைக்கு மிக அருகே அமைந்து இருந்த கிராமம் என்கிற அடிப்படையில் பன்னெடுங்காலமாகவே பண்டத்தரிப்பு என்னும் பெயர் இக்கிராமத்தின் பெயராக அமைந்தது எனலாம் . வேறு சிலர் பாண்டியர்களின் இலங்கை மீதான படையெடுப்பின்போது பாண்டியரின் படைகள் தரித்துச்செல்லும் இடமாக இருந்ததினால் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு என மருவியதாகவும் சில கர்ணபரம்பரை கதைகள் கூறுகின்றன.1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டத்தரிப்பு&oldid=3154386" இருந்து மீள்விக்கப்பட்டது