வைரத்தை வைரத்தாலே அறுக்க முடியும் (தந்திரக்கதை)

இந்திய தந்திரக் கதை

வைரத்தை வைரத்தால் அறுத்தல் என்பது ஒரு இந்திய தந்திரக் கதை . ஆண்ட்ரூ லாங் அதை ஆலிவ் தேவதை புத்தக தொகுப்பில் (1907) இல் சேர்த்துள்ளார். இக்கதையை ஃபெரோஷெபூரில் மேஜர் கேம்ப்பெல் சேகரித்த பஞ்சாபி கதை என்றும் கூறியுள்ளார்.

கதைச்சுருக்கம்

தொகு

ஒரு வணிகர், தனது சொந்த ஊரை விட்டு தொலைதூர பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அங்கே பல வருட வறுமை மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு பணக்காரர் ஆனார். அதன்பின்னர் வீட்டிற்குச் சென்று மனைவியிடமும் தன் உறவினர்களிடமும் செல்ல முடிவு செய்து வரும் வழியில் ஒருவரைச் சந்தித்தார், அவரோ  அந்த வணிகர் செல்லும் சாலை திருடர்களால் சூழப்பட்டுள்ளது என்று அன்போடு எச்சரித்தார். அதைக்கேட்டு யோசித்த அந்த வணிகனோ, அந்த நபரையே நம்பி, அவரது சேமிப்பை ஒரு பெட்டியில் அடைத்து அவரிடம்  கொடுத்து விட்டு துணைக்கு ஆட்களை கூட்டி வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். னார், அதன்படி  வணிகரும் தனது நகை மற்றும் பணத்தை  ஒரு பெட்டியில் வைத்து அந்த ஆளின் வசம் ஒப்படைத்து சென்றார் .சிறிது காலம் சென்ற பின்னர் அவர் திரும்பி தனது சொந்தங்களுடன் தனது பொருட்களை கொடுத்து கடைக்கே திரும்பி வந்ததும், கடையில் இருந்தவர் அப்படி எதையும் யாரும் கொடுத்து வைக்கவில்லை  என்று மறுத்து, அவரை கடைக்கு வெளியே தள்ளினார். அதை கேட்ட வியாபாரி மிகவும்  கோபமும் வருத்தமும் அடைந்தார்.

கோஷி  ராம் சாலையில் தூசி படிந்த நிலையில் ஒரு மனிதன் கிடப்பதைப் பார்த்து, என்ன நடந்தது என்று கேட்டார். அந்த வணிகனுக்கு எழுந்து உட்கார்ந்து நடந்ததை சொன்னான். அதை கேட்ட கோஷி ராம் , அடுத்த நாள் அந்த கடைக்கு அருகில் சென்று காத்திருக்குமாறும்,  யாரோ அவருக்கு சமிக்ஞை கொடுக்கும் போது அந்த கடைக்கு  திரும்பச் சென்று அவரது நகைப்பெட்டியை கேட்டால் அந்த ஏமாற்றிய கடைக்காரன் மறுக்காமல் கொடுத்து விடுவான் எனவும் கூறினார், அதே போல அந்த வணிகர் காத்திருந்தபோது, ஒரு கழுதை மேலே உட்கார்ந்து வந்த ஒரு ஆண்,  அதே கடைக்காரரிடம் வந்து ஒரு பெண்மணி தனது நகைகளின் பெட்டிகளை பாதுகாப்பிற்காக அவனிடம் விட்டுச் செல்ல விரும்புவதாக  பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே, சமிக்ஞை கிடைத்து வணிகனுக்கு பேசியபடியே தனது பெட்டியை கேட்க வந்தான். அந்த பெண்மணியின் நகைப்பெட்டி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் இவனோடு சண்டையிட்டு மறுத்தால் அந்த பெண்மணியின் பெட்டி கிடைக்காது என நினைத்த அந்த கடைக்காரன், இவனது  பெட்டியைக் கொடுத்தான்.

தனது நகைப்பெட்டி கிடைத்ததும் வணிகர் தெருவில் நடனமாடத் தொடங்கினார், அதே நேரம் கோஷி ராம் அந்த கழுதையின் பக்கத்திலிருந்த பெட்டியில்  இருந்து வெளிவந்து வணிகரிடம் சேர்ந்து நடனம் ஆடினார். பிறகு அந்த கடைக்காரனும் அவர்களுடன் நடனத்தில் சேர்ந்து கொண்டார். பக்கத்து கடைக்காரன் அவரிடம் ஏன் நடனம் ஆடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, வணிகர் தனது நகைகளை மீட்டுவிட்டதற்காகவும், கோஷி ராம் அவரை ஏமாற்றிவிட்டதை நினைத்து ஆடுவதாகவும், அந்த கடைக்காரனோ,மக்களை ஏமாற்றுவதற்கான அனைத்து வழிகளையும் கற்றுக்கொண்டதாக தான் நினைத்ததாகவும், ஆனால் இப்போது தனக்கு இன்னொரு வழியும்  தெரியும் என்பதால் ஆடுவதாகவும் தெரிவித்தார்.

வெளி இணைப்புகள்

தொகு