வொயேஜ் சென்சரி ஒன்லைன்

வொயேஜ் சென்சரி ஒன்லைன் எனப்படுவது இணையத்தில் பல பயனர்கள் இணைந்து விளையாடும் ஒரு கணனி விளையாட்டாகும். இதை IGG எனும் நிறுவனம் வெளியிட்டு வைத்தது. இந்த விளையாட்டு 17ம் நூற்றாண்டில் நடப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அக்காலப் பகுதியில் பிரபலமாக இருந்த கரையோர நகரங்களையும் கொண்டமைந்துள்ளது. மற்றய விளையாட்டுகளைப்போல அல்லாமல் இந்த கணனி விளையாட்டு பயனர்களை பல்வேறு தொழில் முறைகளில் கணனி விளையாட்டில் தேர்ச்சியடைய வழிவிடுகின்றது.

வரலாறு தொகு

 
விளையாட்டின் போது கடலில் செல்லும் கப்பல் ஒன்று

இதன் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்படுவதன் முன்பு சீனா, தென்கொரியா, செர்மனி ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு வெளியிடப்பட்டிருந்தது. டிசம்பர் 8, 2006ல் 1000 பேருக்கு ஆங்கிலப் பதிப்பின் அல்பா வெளியீடு நிகழ்ந்தது. இதன் பின்னர் டிசம்பர் 22, 2006 ல் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டது. ஏப்ரல் 8, 2007ல் முழுமையான பதிப்பு வெளியிடப்பட்டது.

கப்பல்கள் தொகு

இந்த விளையாட்டில் மூன்று வகையான கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. யுத்த கப்பல்கள், கொள்ளையர் கப்பல்கள், வியாபாரம் செய்யும் கப்பல்கள். சண்டைக் கப்பல்களில் அதிகளவு பீரங்கிகளைப் பொருத்த முடிவதுடன் பெரும் தாக்குதல்களையும் தாங்கி நீண்ட நேரம் கடலில் நிலைத்திருக்கும் சக்தி வாய்ந்தது. கொள்ளைக்கார கப்பல்கள் அதிகளவு மாலுமிகளை ஏற்றுவதுடன் விரைவான வேகத்தில் பயனிக்க கூடியதும் ஆகும். வியாபாரக் கப்பல்கள் மற்றய கப்பல்கள் எல்லாவற்றையும் விட வேகம் குறைவானதுடன் யுத்த நேரத்தில் தாக்குதலை தாங்க கூடிய வலிமை அற்றது ஆனால் அதிகளவான பாண்டங்களை ஏற்றும் வலிமை பெற்றது. விளையாட்டை விளையாடும் நபர் ஒருவர் எத்தனை கப்பலை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கப்பல்களுக்கு 11 படிகள் இருக்கின்றன. புதிய இணைப்பில் 12 படிமுறைகள் இருப்பதுடன் ட்ராகன் தலைவைத்த ஆரம்ப படிநிலை விளையாட்டு வீரர்களுக்கான கப்பலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வொயேஜ்_சென்சரி_ஒன்லைன்&oldid=2229541" இலிருந்து மீள்விக்கப்பட்டது