வோல்கா பல்கேரியா மீதான மங்கோலியப் படையெடுப்பு

வோல்கா பல்கேரியா மீதான மங்கோலியப் படையெடுப்பானது 1223 முதல் 1236 வரை நீடித்தது. கீழ் வோல்கா மற்றும் கமா ஆற்றங்கரைகளில் அமைந்திருந்த பல்கர் அரசானது அதன் வரலாறு முழுவதும் ஐரோவாசியாவில் மென் உரோம வணிகத்தின் மையமாகத் திகழ்ந்தது. மங்கோலியப் படையெடுப்புக்கு முன்னர் நோவ்கோரோடு மற்றும் விளாதிமிரில் இருந்த உருசியர்கள் அடிக்கடி இப்பகுதியை தாக்கி சூறையாடினர். இவ்வாறாக அவர்கள் பல்கர் அரசின் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியை பலவீனமாக்கினர்.[1] 1223ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1224ல் பல்கர்கள் பதுங்கி இருந்து திடீர் தாக்குதலை மங்கோலியர்கள் மீது நடத்தினர்.[2] 1229-1234 காலகட்டத்தில் பல்வேறு சண்டைகள் நடைபெற்றன. மங்கோலிய பேரரசானது பல்கர்களை 1236ஆம் ஆண்டு வென்றது.

மேலும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. George V. Lantzeff – Russian Eastward Expansion before the Mongol Invasion, American Slavic and East European Review, Vol. 6, No. 3/4 (Dec., 1947), pp. 1–10
  2. Allsen, Thomas T. – The Princes of the Left Hand: An Introduction to the History of the ulus of Orda in the Thirteenth and Early Fourteenth Centuries, Archivum Eurasiae medii aevi, 5 (1987), 5 – 40.