வோல்ட்டா அடுக்கு
வோல்ட்டா அடுக்கு (voltaic pile) என்பது மின்னோட்டத்தைத் தொடர்ச்சியாக வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட முதலாவது மின்கலமாகும். 1800 ஆம் ஆண்டில் வோல்ட்டா என்பவரால் அமைக்கப்பட்ட இதில் நாகத்தகடும் செப்புத் தகடும் நீர்த்தக் கந்தக அமிலத்தில் தோய்த்தத் துணியினால் பிரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஒன்றன் மேல் ஒன்றாக பல அடுக்குகளைக் கொண்டது வோல்ட்டா அடுக்காகும். மின்னழுத்த வேறுபாட்டினைப் பெற இது உதவுகிறது.[1] 1870களில் டைனமோ எனப்படும் மின்னாக்கிகள் கண்டுபிடிக்கப்படும் வரை 19ம் நூற்றாண்டில் மின் தொழிற்துறை முழுமையாக வோல்ட்டா மின்கலங்கள் மூலமே மின்வலுவைப் பெற்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Russell, Colin (ஆகத்து 2003). "Enterprise and electrolysis...". Chemistry World. http://www.rsc.org/chemistryworld/Issues/2003/August/electrolysis.asp.