வ. பெருமாள்

வ. பெருமாள் (பிறப்பு நவம்பர் 9 1943) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ருக்மணி பெருமாள், மல்லிகா பெருமாள், கோவிதாசன், உதயச்சந்திரன் போன்ற புனையர்களால் நன்கறியப்பட்ட இவர் கோயில் அலுவலராவார். மேலும் இவர் சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், மலேசிய-மொரிசியஸ் நட்புறவுக் கழகத்தின் பொருளாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தற்போது அதிகம் சமயக் கட்டுரைகளே எழுதி வருகிறார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

தொகு
  • "சைவமணி" பட்டம் (1996) குவால லும்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம்

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._பெருமாள்&oldid=3227667" இலிருந்து மீள்விக்கப்பட்டது