ஷாபூர் (பாகிஸ்தான்)

ஷாபூர் (Shahpur) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சார்கோதா மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கட்தொகை 274,000 , பெரும்பான்மையோர் முஸ்லீம்கள் . இவர்களின் மொழி பஞ்சாபி ஆகும். இந்நகரத்தின் பழைய பெயர் ராம்பூர் ஆகும். 17 ஆம் நூற்றாண்டுவரை இந்து மக்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். இந்நகரத்தின் பெயர் சுஃபி ஞானியால் மாற்றப்பட்டது. 1893 -ல் ஷாபூர் மாவட்டமாக மாற்றப்பட்டது. பின்னர் 1914 -ல் மாவட்டத் தலைநகர் இங்கிருந்து சார்கோதாவிற்கு மாற்றப்பட்டது. இங்கு 18 ஆம் நூற்றாண்டிலுள்ள இந்து மதக் கோவில்கள் உள்ளன. இந்நகரத்தின் முக்கிய நுழைவாயில் 1863 -ல் இந்நகரத்தின் பெயர் ராம்பூர் என இருக்கும் போது கட்டப்பட்டது. இதன் தொடர்வண்டி நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்த நகரத்தின் மக்கள் கடும் உழைப்பாளிகள். [1]

மேற்கோள்கள் தொகு

  1. "சார்கோதா மாவட்ட வரலாறு – Punjab portal". Archived from the original on 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2013-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாபூர்_(பாகிஸ்தான்)&oldid=3573495" இலிருந்து மீள்விக்கப்பட்டது