சீரடி

(ஷிர்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீரடி (Shirdi, ஒலிப்பு) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் ரகதா வட்டதைச் சேர்ந்த சீரடி நகரப் பஞ்சாயத்து நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் அகமத்நகரிலிருந்து 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த சீரடி சாயி பாபா வாழ்ந்த இடம் என்பதால் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும் சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றம் பெற்று பலர் வருகின்ற ஊராக முன்னேறி உள்ளது. மும்பை, புனே போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் தொடர்வண்டி இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சீரடி
நகரம்
சீரடி சாயி பாபா
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகமதுநகர்
ஏற்றம்504 m (1,654 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்26,169
மொழிகள்
 • அலுவல்முறைமராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN423109
தொலைபேசி குறியீடு02423
வாகனப் பதிவுMH-17

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரடி&oldid=3538992" இலிருந்து மீள்விக்கப்பட்டது